Thursday 27 February 2020

இரட்டைத் தலைகளுடன் வாழ விதிக்கப்பட்டவன்!

சுபா செந்தில்குமாரின்கடலெனும் வசீகர மீன்தொட்டிசமீபத்தில் வாங்கிய, வாசித்துக் கொண்டிருக்கின்ற கவிதை நூல்களில் ஒன்று. தலைப்பு மட்டுமல்ல இதில் இருக்கும் கவிதைகளும் வசீகரமானவை. வாழ்வியலின் கூறுகளை அதன் அகத்திலும், புறத்திலுமாய் நின்று நம்மோடு கலந்துரையாடுபவைகள். அச்சு, இணைய இதழ்களிலும், முகநூல் பக்கத்திலும் இவரின் கவிதைகளை அவ்வப்போது வாசித்திருந்த போதும் தொகுப்பில் வாசிக்கும் போது அது வாழ்வின் அத்தனை இழைகளிலும் பின்னலிட்டு செல்லும் உணர்வைத் தருகின்றன.

அனுபவித்த / கேள்விபட்ட / கண்டுனர்ந்த நிகழ்வை தனக்கான மொழி நடையில் முழு சித்திரமாக்கித் தரும் சுபாவின் கவிதைகள் நமக்கான அருகாமையை இன்னும் சுருங்க வைக்கின்றன. தொகுப்பில் இருக்கும் அப்படியான பல கவிதைகளுள் ஒன்றுபொருள்வயிற் பிரிதல்எனும் கவிதை.

Wednesday 26 February 2020

அகச்சுடரின் ஆலாபனை!

ரமா சுரேஷ் தமிழகத்தைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூரை வசிப்பிடமாகவும் கொண்டவர். அவரின் முதல் சிறுகதைத் தொகுப்புஉட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 81”. .சீ. சிவக்குமார் நினைவுப் பரிசை வென்ற இச்சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதிமூன்று கதைகள் உள்ளன. லஷ்மி சரவணக்குமாரின் மோக்லி பதிப்பகம் இத்தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறது.

படைப்பாளி நிகழ்வுகளை உருவாக்குவதில்லை. அவன் சந்திக்கும், பார்க்கும் மனிதர்களிடமிருந்து பெறும் நிகழ்வுகளைச் சித்திரமாக்கும் வேலையை மட்டுமே செய்கின்றான். அதற்குள் படைப்பாளி இட்டு நிரப்பும் கதாபாத்திரங்கள் வாசகனுக்குள் பாய்ச்சலையும், புகைச்சலையும் தரும் போது அந்தச் சித்திரம் தானாகவே உயிர் பெற்று எழுந்து கொள்கிறது. அதை சக வாசிப்பாளனுக்கும், இன்னொரு படைப்பாளிக்கும் வாசகன் அறியத் தருகின்றான். அப்படி வாய்க்கும் சந்தர்ப்பங்களே நம்மைச் சுற்றியிருப்பவர்களிடமும், சக மனிதர்களிடமும் அதுவரை நாம் கண்டிராத, அமிழ்ந்து கிடக்கும் அன்பையும், வன்மங்களையும் கண்டடைய உதவுகின்றன. அதனால் தான் காலம் கடந்தும், மொழி கடந்தும் சிறுகதைகள் பீனிக்ஸாய் எழுந்து கொண்டே இருக்கின்றன. இத்தொகுப்பில் அப்படி உயிர்பித்து எழும் கதைகள் இருக்கின்றன.

Sunday 2 February 2020

அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறு

தன் முகநூல் பக்கத்தில் என்அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறுநூல் குறித்து எழுத்தாளர் ராம் தங்கம் எழுதியுள்ள அறிமுக உரை

சிறிய புத்தகம் என்றாலும் இதன் தகவல்கள் படுசுவாரசியமும், அதிர்ச்சியையும் தரக்கூடியது. ஒருமுறையாவது அந்தமான் சிறை சென்று பார்க்க வேண்டும் அங்கு காற்றோடு கலந்திருக்கும் புரட்சியாளர்களின் குமுறலைகளை கேட்க வேண்டும். அங்கு படிந்திருந்த போராளிகளின் ரத்த வாடைய முகர வேண்டும் என்று தோன்கிறது. டேவிட் பர்ரி என்கிற சர்வாதிகார 4 அடி கொடுங்கோலன் பற்றிய தரவுகள் வியக்க வைக்கிறது. அருமையான ஆய்வு நூல்!