Sunday 29 August 2021

காம்கேரின் “வாசக கெளரவம்”!

காம்கேர் நிறுவனர் காம்கேர்.புவனேஸ்வரி அவர்கள் முகநூலில் எழுதி வரும் பதிவுஜம்முனு வாழ காம்கேரின் OTP". நம் அன்றாட செயல்பாடுகள், நம்மைச் சுற்றி, நம் வீட்டில் நிகழும் நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொள்ளவும், கண்டுணரவும் இல்லாது கடந்து விட்ட, கவனிக்கத் தவறிய விசயங்களை சுட்டியும், குட்டியும் அவர் எழுதும் பதிவுகளை அன்றாடம் வாசிக்க இயலாத போதும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து விடுவேன்.

பிள்ளைகளோடு செலவிடும் நேரங்களில் அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன். ”பாடம்”, ”படிப்பினை”, ”அறிவுரைஎன எல்லா தளங்களிலும் அந்த பதிவுகள் விசயதானங்களை வழங்கி இருக்கின்றன.
 
எனக்கு மட்டுமல்ல, அவருடைய பதிவுகளை வாசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் அவ்வாறே  கிடைத்திருக்கின்றன என்பதற்கு அவரின் ”காம்கேரின்OTP” பதிவுகளுக்கு  வாசகர்களால் எழுதப்படும் பின்னூட்டங்களே சாட்சி!

Saturday 28 August 2021

"படைப்பாளி" எனும் பேசுபொருள்!

"வாசிக்க வாங்குனவனுக ஆட்டயப் போட்டுட்டு போயிட்டானுகன்னு புலம்பாமல் முதன் முதலில் வந்த பதிப்பு நுல்கள் தற்போதைய விலையை விட குறைவாக இருக்கும். அவைகளைத் தேடிப் பார்த்து வேண்டிய நூல்களை வாங்கிக் கொள். பணம் நான் தருகிறேன்என நண்பர் சொல்லியிருந்தார்.

"கரும்பு தின்னக்கூலியா?" என்றாலும், "ஏண்டா இந்த உறுதி மொழியைக் கொடுத்தோம்?" என அவன் நினைத்து விடவும் கூடாது என்பதால் பார்த்து விட்டு சொல்கிறேன் என சொல்லி வைத்திருந்தேன். பா.ரா. புத்தகங்களில் சிலவற்றை வாங்கிக் கொள்ளும் முடிவில் நேற்று வாரக் கடைசி என்பதால் நண்பரோடு வழக்கமாக புத்தகங்கள் வாங்கும் கடைக்கு சென்றிருந்தேன்.

நுழைந்ததும் முகப்பில்மாயவலைவைத்திருந்தார்கள். அதைக் கையில் எடுத்ததும் அங்கிருந்த பையன், சார்பா.ரா. பார்க்குறீங்களா?” என்றான். அந்தக் கடையில் பலமுறை நான் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். ஒருமுறை கூட புத்தகங்களின் ஆசிரியர் பெயர் சொல்லி இப்படி அந்தக் கடை ஊழியர்கள் கேட்டதில்லை. நேற்று கேட்டதும் ஆச்சர்யமாக இருந்தது. சரி என்றதும் ஒரு புத்தக அடுக்குக்கு அழைத்துச் சென்றான்.