Saturday, 16 April 2016
Saturday, 19 December 2015
அப்பாவின் படகு
சிங்கப்பூரில் இயங்கும் தங்கமீன் பதிப்பகம் கடந்த வருட தனது வாசகர் வட்டச் சிறுகதைகளை “அப்பாவின் படகு” என்ற பெயரில் தொகுப்பாக மலரச் செய்திருக்கிறது. இத்தொகுப்பில் பத்துப் படைப்பாளிகளின் பதினைந்து கதைகள் உள்ளன,
ஒரு படைப்பை வாசிப்பிற்காகத் தேர்ந்தெடுக்கும் வாசகன் அதில் தொடர்ந்து பயணிக்க அப்படைப்பானது அவனைத் தன்னுள் இறுத்திக் கொள்ளும் தகவமைப்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் வலக்கையால் எடுத்ததை இடக்கையால் புறந்தள்ளிப் போய் விடுவான். வாசிப்பாளனின் இந்தப் புறந்தள்ளலை, புறக்கணித்தலை எப்பொழுது ஒரு படைப்பு புறந்தள்ள வைக்கிறதோ அப்பொழுது அந்தப் படைப்பு வெற்றியின் முகத்துவாரத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. இப்படி நிலை நிறுத்தல்களுக்கான கூறுகளைக் கொண்டிருக்கும் படைப்பாக இத்தொகுப்பின் கதைகள் சிங்கப்பூரின் வாழ்வியல் சார்ந்தும், சிங்கப்பூரைக் களமாகக் காட்டியும் விரிந்து நிற்கின்றன.
Monday, 9 November 2015
"சுப்புடு" மேடைக் கச்சேரி செய்தால்!
தொடர், தொடர்பற்ற வேலைகளால் இம்மாதம் நண்பர்கள் அழைத்த நிகழ்வுகளுக்குச் செல்ல இயலாமல் போன நிலையில் நேற்று (08-11-2015) நடைபெற்ற தங்கமீன் வாசகர் வட்ட மாதாந்திர நிகழ்விற்குச் சென்றிருந்தேன்.
சில புதிய முகங்களின் அறிமுகத்தோடும் முகநூலில் பார்த்தவர்களை நேரில் பார்த்த சந்தோசத்தோடும் தொடங்கிய நிகழ்வுகளை இந்த மாத வாசகரான நண்பர் கீழை அ.கதிர்வேல் அவர்கள் நெறியாள்கை செய்தார். தன்னுடைய நாற்பது ஆண்டு கால பத்திரிக்கை அனுபவத்தின் அடிப்படையில் இதழ்களில் படைப்புகளின் மூலம் பங்களிப்பது குறித்தான தகவல்களை நெறியாள்கையில் சிறு, சிறு துணுக்குகளாக அவர் தந்திருக்கலாம். ஏமாற்றி விட்டார். அவருக்கே உரிய நகைச்சுவை நெறியாள்கையைச் சிறப்பாக்கியது.
Monday, 12 October 2015
களமாடும் சாளரமான தங்கமீன்!
ஐம்பதாவது நிகழ்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தங்கமீன் வாசகர் வட்டத்தின் நாற்பத்தி இரண்டாவது கூட்டம் நேற்று (11-10-2015) தோபயோ பொது நூலக அரங்கில் நடைபெற்றது.
பார்வையானாக மட்டும் இருந்தால் கொஞ்சம் லேட்டாகப் போகலாம். நேற்றைய நிகழ்வில் பங்கேற்பாளனாகவும் இருந்ததால் பத்து நிமிடங்களுக்கு முன்பே அங்கு இருக்கும் படி பார்த்துக் கொண்டேன். “சரியான நேரத்திற்கு வந்துட்டீங்கபோல” என நண்பர் யாழிசை கேட்ட பின்பு தான். எப்படியெல்லாம் நம்மளைக் கவனிக்கிறாங்க? என்பது தெரிந்தது. புதிய நிகழ்வுகளை முயற்சித்துப் பார்ப்பதில் தயங்காத தங்கமீன் நேற்றும் புதிய சாளரம் ஒன்றைத் திறந்து விட்டது. தங்கமீன் பதிப்பிக்காத ஒரு நூலுக்கான அறிமுகத்திற்குத் தன் மாதாந்திர நிகழ்வை வழங்கிச் சிறப்பித்தது. சிங்கப்பூர் இலக்கியக் களங்களில் தொடர்ந்து களமாடவும், கவனம் பெறவும் இப்படியான தேவை அவசியம் என நினைக்கிறேன். தொடர வேண்டும்.

