Tuesday 28 October 2014

புகைப்படம் - 5

மாதவி இலக்கிய மன்றம் நடத்திய கவி அரங்கில் பரிசு பெற்ற போது


வாக்குறுதி

சிங்கப்பூரில் இயங்கும் கவிமாலை என்ற அமைப்பு நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசுக்குத் தேர்வான கவிதை )

 உச்சரிப்பதைப் போல இலகுவாய் இல்லை

பிறருக்குக் கொடுப்பதும்

கொடுத்ததை நிறைவேற்றுவதும்.

பல நேரங்களில்

நம்பிக்கையாகத் தரப்பட்டும்

அவநம்பிக்கையாய் நீர்த்து விடுகிறது.

ஏதோ ஒரு நிலையில்

பொய்யான காரணங்களுக்குள்

கரைந்து போய் விடுகிறது.

Tuesday 21 October 2014

புரிதலில் இருந்த தெளிவு!

மகனுக்கும், மகளுக்கும் நடந்த சண்டையில் அவளின் உதட்டில் குத்தி இரத்தம் வரவைத்து விட்டான் என்ற குற்றச்சாட்டோடு மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது.

வழக்கம் போல ஆலமரம் இல்லா நாட்டாமையாய் பஞ்சாயத்தை நடத்துவதற்காக மகளை அழைத்து விசாரித்தேன்.

கழுத்தில் அணியும் பாசியில் தொடங்கி பள்ளிப் பேருந்தில் அமர்ந்து வரும் இருக்கை வரைக்கும் தனக்கும், தன் தம்பிக்கும் இருந்து வரும் பிரச்சனைகளை சொல்லி முடித்தாள்.

Monday 20 October 2014

புகைப்படம் - 3

 முனைவர் மன்னார்குடி ராஜகோபாலன் அவர்களிடமிருந்து பரிசு பெற்ற போது


Friday 17 October 2014

முயலாமையை முடக்குங்கள்

காரணம் சொல்பவர்கள் காரியம் செய்வதில்லை என்பது ஒரு வழக்குச்சொல் மட்டுமல்ல பொருள் பொதிந்த வாழ்வியல் சொல்லும் கூட! பள்ளிப் பருவத்தில் வீட்டுப்பாடம் செய்யாததற்கும், வேலைக்குச் சென்ற சமயங்களில் கூடுதல் விடுப்பு எடுப்பதற்கும் காரனங்களைச் சொல்லிச் சொல்லி பழகிவந்த நம்மில் பலருக்கும் அதிலிருந்து விடுபடுவது இயலாத காரியமாகி விட்டது. அதனால் தான் சிலர் மட்டும் சாதிக்கின்றனர். வெற்றியாளர்களாக உருவாகின்றனர்.

என்ன வேண்டும் என்பதை விட என்ன வேண்டாம் என சொல்லவே நாம் பழகி வருகிறோம். பழகி விட்டோம். வெளிநாடுகளில் நம் நாடுகளிலிருந்து நேரடியாக நிர்வாகத்துறை பணிக்கு வருகின்றவர்களைப் பற்றி அங்குள்ளவர்கள் கிடைக்கும் பயன்களை விட அதனால் வரும் விளைவுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்படுபவர்கள் என்று கமெண்ட் அடிப்பார்கள். இது முற்றிலும் உண்மை என கூற முடியாவிட்டாலும் இதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது. இதை நான் பணிபுரிந்த நிறுவனங்களில் கண்கூடாக கண்டிருக்கிறேன். நிறுவனம் நடத்தும் ஊழியர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்களில் நம்மவர்கள் இருந்தால் செய்யுங்கள் என்று முதலில் சொல்ல மாட்டார்கள். நீங்க செய்யப்போகிற இந்த விசயத்தால் கட்டாயம் இது போன்ற எதிர் விளைவுகள் வரலாம் என்று தான் ஆரம்பிப்பார்கள்.