Monday 28 January 2019

அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறு

   இன்பச் சுற்றுலாவுக்காக இன்று அந்தமான் வருபவர்களுக்கும், பிழைப்பிற்காக வந்து அங்கேயே குடியேறிவிட்ட இந்தியாவின் இதரப் பகுதியினருக்கும், இன்றைய தலைமுறையினருக்கும் அந்தமானின் முந்தைய கொடூர முகத்தின் சுவடுகளைச் சொல்லும் எச்சங்களாய் நிற்கிறது அந்தமான் கூண்டுச் சிறை! தனிமனிதனுக்கு இருக்கும் வரலாற்றைப் போல இச்சிறைக்கும் ஒரு வரலாறு உண்டு. 

ஹிட்லர். முசோலினி, இடிஅமீன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுக்கும், அந்தமான் கூண்டுச்சிறையின்  வரலாறுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரு வரலாறுகளும் கொடூரத்தின் உச்சங்களில் உருவானவை. கவிஞர் வைரமுத்து பதிவு செய்துள்ள வரியில் சொன்னால் சுதந்திரத்திற்காகச் சிந்தப்பட்ட இரத்தத்தின் வாசனையை இச்சிறைச்சாலையில் நுகரலாம். அந்த அளவுக்குக் கொடூரங்களின் கட்டமைப்பினைக் கொண்டது அந்தமான் கூண்டுச் சிறையின் வரலாறு! தாங்கள் அடைபட்டுக் கிடக்கப்போகும் சிறைச்சாலையைத் தாங்களே கட்டிக் கொண்டதும், கட்டிய சிறையில் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்படதுமான வரலாறு வேறு எந்தச் சிறைச்சாலைகளுக்கும் இல்லை.

Thursday 24 January 2019

உள் கடந்தால் கடவுள்!

நான் தேர்வில் பாஸ் ஆக வேண்டும். நான் முதல் ரேங்க் எடுக்க வேண்டும். எனக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும். எனக்கு நல்ல கணவர் மட்டுமல்ல என் பேச்சைக் கேட்கின்ற மாமியாரும், நாத்தனாரும் வேண்டும்; எனக்குக் குழந்தை வேண்டும் அதுவும் ஆண்குழந்தை என்றால் நிரம்ப சந்தோசம் என தொடர் கதையாய் நீளும் இவையெல்லாம் ஆத்ம சுத்திக்காக ஆலயம் வரும் நாம் சுயநலத்தோடு இறைவனிடம் கேட்கும் சங்கதிகள்! ஆலயத்திற்கு வெளியில் அமர்ந்து கொண்டு நம்மிடம் தனக்காக உதவி கேட்பவர்களைபிச்சைக் காரர்கள்என ஏளனம் செய்கின்றோம். அதே காரியத்தை ஆலயத்திற்குள் இருந்து கொண்டு செய்யும் நம்மை எப்படி அழைத்து ஏளனம் செய்து கொள்வது?

Friday 18 January 2019

அந்தமான் – செல்லுலார் சிறை

அகிம்சைவாதிகள் ஆங்கிலேயர்களிடம் அடிபட்டுக் கொண்டே குரல் கொடுக்க, அடித்தவனின் அடித்தளத்தையே ஆட்டுவித்து குரல் கொடுத்தவர்கள் புரட்சியாளர்கள். அவர்களை ஒடுக்க அவர்களைக் கொண்டே உருவாக்கப்பட்டது தான்அந்தமான்செல்லுலார் சிறை”! தாங்கள் அடைபட்டுக் கிடக்கப் போகும் சிறைச்சாலையை தாங்களே கட்டிக் கொண்டதும், கட்டிய சிறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதுமான வரலாற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கிற சிறைச் சாலையின் கதை இது……….

Friday 11 January 2019

கொடி காத்த திருப்பூர் குமரன்!

பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைகளுக்கு எதிராக காந்தியடிகள் சத்யாகிரகப் போராட்டத்திற்கு விடுத்த அறைகூவல் நாடெங்கும் அனலாய் பரவிக் கொண்டிருந்தது. அதில் தன்னையும் இணைத்துக் கொள்ள திருப்பூர் நகரில் இயங்கி வந்த தேச பந்து வாலிபர் சங்கம் முடிவு செய்தது. அச்சங்க உறுப்பினர்கள் கூடி 10.01.1932 தாங்கள் சத்யாகிரகம் நடத்துவதற்கான தினமாகக்  குறித்தனர். அரசின் தடையை மீறி ஊர்வலம் செல்லவும் முடிவு செய்தனர்.

தேசபந்து வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் சத்யாகிரகிகளாக அறிவிக்கப்பட்டனர். பி. எஸ். சுந்தரம் தலைமையில் அவர்கள் அணிவகுத்துச் செல்வதெனமுடிவானது. திட்டமிட்டபடி அன்றைய தினம் காலை 6 மணிக்குவந்தே மாதரம்”, ”மகாத்மா காந்திக்கு ஜேஎன்ற கோஷத்தோடு அவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

இரண்டு இரண்டு பேராக அணிவகுத்து வந்த சத்யாகிரகிகள் திருப்பூர் நகர வீதிகளின் வழியே வலம் வந்தனர். நகரக் காவல் நிலையம் அருகில் அவர்கள் வந்ததும் வேங்கையின் பாய்ச்சலோடு முப்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் தடிகளோடு பாய்ந்து வந்தனர். முன்னெச்சரிக்கை ஏதும் கொடுக்காமல் கண்மூடித்தனமாகத் தாக்க ஆரம்பித்தனர். திடீரென, அவர்களின் கவனமும், தாக்குதலும் ஊர்வலத்தின் முதல் வரிசையில் மூவர்ணக் கொடியை உயர்த்திப் பிடித்த படி நின்ற இளைஞன் மீது திரும்பியது.