Thursday 26 May 2016

ஒப்பனை முகங்கள்

சவுக்குக் கழிகளால் கட்டப்பட்டிருந்த அந்தச் சார மேடையின் மீது நின்று கொண்டு ஒவ்வொரு செங்கலாய் கொத்தனார் வரிசைப்படுத்திக் கொண்டிருந்ததைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார் இராமலிங்கம். அறுபது வயதைக் கடந்து விட்ட அவருக்கு அது ஒன்றும் அற்புதமான, வியக்கத்தக்க காட்சியல்ல. ஆனால், செங்கல்களாலும், சிமெண்ட் கலவையாலும் எழுந்து வரும் அந்தக் கட்டத்தின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியும் அவருக்குள் ஒரு ஆத்ம திருப்தியை அளித்துக் கொண்டே இருந்தது. மாலையில் வேலை முடிந்து பணியாளர்கள் கிளம்பிய பின் இரவு நேரக் காவலுக்காக கட்டிடத்திற்கு வரும் பெரியவரை எதிர்பார்த்து இருக்கையில் சாய்ந்த படி உட்கார்ந்திருந்தார்

ஒரு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியராய் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்த இராமலிங்கத்திற்கு மனைவியின் ஊரான இந்தக் கிராமமும், இங்கிருக்கும் உறவினர்களும் கற்றுக் கொடுத்த விசயங்கள் அவரின் வாழ்நாளில் மறக்க முடியாதவைகள்.

Monday 23 May 2016

தேவதைகளின் அட்டகாசம் - 8

சும்மா, சும்மா காசு கேட்கக் கூடாதுன்னு நீங்க சொன்னதால ஒரு டிராயிங் (DRAWING) வரைஞ்சு அம்மாக்கிட்ட கொடுத்துட்டு காசு கேட்டேன். நல்லா இருக்குன்னு மட்டும் சொல்லி வாங்கி வச்சுக்கிட்டு காசு தர மாட்டேங்கிறாங்க டாடி.

உனக்காக தினமும் அம்மா எல்லாம் செய்றா. அவளுக்குச் சும்மா கொடுத்ததா நினைச்சுக்க.

டாடி... தாத்தாவுக்குக் கொடுத்த டிராயிங்கை விட அம்மாவுக்குக் கொடுத்த டிராயிங்ல நிறைய கலர் கொடுத்து அட்டையில ஒட்டி சுவத்துல தொங்கப் போடுறது மாதிரி ஓட்டை போட்டு நூல் கோர்த்து செமையா செஞ்சு கொடுத்திருக்கேன் டாடி. அதுக்காகவாது ஏதாவது தரலாம்ல.

சரி. எவ்வளவு தரச் சொல்ல?

தாத்தா இருபது ரூபா கொடுத்தாங்க.

அவ்வளவு எல்லாம் உங்க அம்மா தரமாட்டா.

Saturday 21 May 2016

தகுதி

தொண்டர்கள் சூழ 
சிலைகளுக்கு மாலையிட்டவனுக்குத் 
தோன்றாமலே போனது.
அடுத்த முறையேனும்
அதற்காகத் தன்னை
தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற 
எண்ணம் மட்டும்!

நன்றி : முத்துக்கமலம்.காம்

Thursday 19 May 2016

உங்களுக்கு நீங்களே!

சிவப்பு விளக்கு எரியும் போது சாலையைக் கடப்பது தவறு என வகுப்பறையில் படித்து விட்டு வரும் குழந்தையை பள்ளியிலிருந்து அழைத்து வரும் தந்தை சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போதே சாலையை விருட்டென கடந்து போவதைக் கண்டு குழம்பிப் போன அந்த குழந்தை, “அப்பா………இது தப்பில்லையா? சிவப்பு லைட் எரியும் போது போனா தப்புன்னு மிஸ் சொன்னாங்களேஎன்றாள். அதற்கு அந்த மகா புத்திசாலி தந்தை அவசரத்துக்கு இப்படி போகலாம் தப்பில்லை என்றான். இப்படியான ரோல்மாடல்களோடு தான் நாமும், நம் குழந்தைகளும் வளர வேண்டியிருக்கிறது. அதனால் தானோ என்னவோ குழந்தைகள் பின்னாளில் அவசரம், அவசியம், கொள்கை, விருப்பம், தேவைகள் என ஏதோ ஒன்றின் பொருட்டு தங்களுடைய தனித்தன்மைகளை இழந்து நிற்கின்றனர். கலங்கரை விளக்காய் ஒளி தர வேண்டியவர்கள் சிமினி விளக்காய் மண்ணெண்ணெய்க்கு ஏங்கி நிற்கிறார்கள். நீங்கள் வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி கொள்ள வேண்டுமானால், அர்த்தமுள்ள வாக்கையை நீங்கள் வாழ வேண்டுமானால் அதற்குதனித்தன்மைஎன்பது அவசியம். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அது அவசியமான ஒன்று. அந்த அவசியத்தை உணர்ந்திருந்ததால் தான் தன் மகனோடு இருந்த தன் படைத்தளபதி தன்னைக் கண்டதும் எழுந்து நின்று மரியாதை செலுத்த போனபோது அதை நெப்போலியன் தடுத்தான். தனித்தன்மை என்று சொன்னதும் அது ஏதோ ஒரு பெரிய விசயமென நினைத்து விடாதீர்கள். உங்களுடைய பழக்கத்தால், நடவடிக்கையால் உங்களை மற்றவர்களுக்கும், உங்களுக்கும் விருப்பமானவராக மாற்றிக்கொள்ளுவது மட்டுமே!