மரத்துப் பிசின் பசை
நார் இடைவார்
மட்டை செருப்பு.
ஓலை தொப்பி
களிமண் பலிங்கி
கொட்டாங்குச்சி வயலின்
கொம்பு ஏற்றம்
சருகு காத்தாடி
கோம்பை வண்டி
மரப்பாச்சி பொம்மை.
இலை பீப்பி
இப்படியான எதுவும்
நம் பிள்ளைகளுக்கு
சாத்தியமற்றுப் போனது
தாத்தாக்களற்ற
தனித்த வாழ்வில்.
நன்றி : முத்துக்கமலம்
நன்றி : முத்துக்கமலம்