Showing posts with label மாயவலை. Show all posts
Showing posts with label மாயவலை. Show all posts

Saturday, 28 August 2021

"படைப்பாளி" எனும் பேசுபொருள்!

"வாசிக்க வாங்குனவனுக ஆட்டயப் போட்டுட்டு போயிட்டானுகன்னு புலம்பாமல் முதன் முதலில் வந்த பதிப்பு நுல்கள் தற்போதைய விலையை விட குறைவாக இருக்கும். அவைகளைத் தேடிப் பார்த்து வேண்டிய நூல்களை வாங்கிக் கொள். பணம் நான் தருகிறேன்என நண்பர் சொல்லியிருந்தார்.

"கரும்பு தின்னக்கூலியா?" என்றாலும், "ஏண்டா இந்த உறுதி மொழியைக் கொடுத்தோம்?" என அவன் நினைத்து விடவும் கூடாது என்பதால் பார்த்து விட்டு சொல்கிறேன் என சொல்லி வைத்திருந்தேன். பா.ரா. புத்தகங்களில் சிலவற்றை வாங்கிக் கொள்ளும் முடிவில் நேற்று வாரக் கடைசி என்பதால் நண்பரோடு வழக்கமாக புத்தகங்கள் வாங்கும் கடைக்கு சென்றிருந்தேன்.

நுழைந்ததும் முகப்பில்மாயவலைவைத்திருந்தார்கள். அதைக் கையில் எடுத்ததும் அங்கிருந்த பையன், சார்பா.ரா. பார்க்குறீங்களா?” என்றான். அந்தக் கடையில் பலமுறை நான் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். ஒருமுறை கூட புத்தகங்களின் ஆசிரியர் பெயர் சொல்லி இப்படி அந்தக் கடை ஊழியர்கள் கேட்டதில்லை. நேற்று கேட்டதும் ஆச்சர்யமாக இருந்தது. சரி என்றதும் ஒரு புத்தக அடுக்குக்கு அழைத்துச் சென்றான்.