சிங்கப்பூரின்
பழைய பெயர்
”டெமாசெக்”. 13 ம் நூற்றாண்டில் (1390 ம் ஆண்டு) ஸ்கந்தர்
ஷா என்னும்
பாலம்பாங்க் மன்னன்
தான் தோற்றுவித்த
சிறு காலனிப்
பகுதியான சிங்கப்பூருக்கு
இப்பெயரை இட்டான்.
சிலப்பதிகாரத்தில் கோவலனின் முற்பிறவி ஊராகக் குறிக்கப்பட்டுள்ள ”சிங்கபுரம்” என்ற பெயரால் ”சிங்கப்பூர்” என்று அழைக்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக 14 ம் நூற்றாண்டிற்கு முன்னர் இப்பகுதிகள் சோழ மண்டலத்தின் ஆளுகையில் இருந்ததைக் குறிப்பிடுகின்றனர்.
14 ம் நூற்றாண்டில் சுமத்திராவில் இயங்கிய விஜய நகரப் பேரரசின் ஆட்சியில் இருந்த ”துமாசிக்” நகரமே 15 ம் நூற்றாண்டில் ”சிங்கப்பூர்” எனப் பெயர் மாற்றம் கண்டதாக மலாய் வரலாறு கூறுகிறது
14 ம் நூற்றாண்டில் சுமத்திரா தீவின் மலாய் இளவரசர் சாங்நிலா உத்தமா கடும் புயல் ஒன்றின் போது இப்பகுதியில் ஒதுங்கியதாகவும் அப்போது சிங்கம் போன்ற ஒரு மிருகத்தைப் பார்த்ததும் சிங்கம் என நினைத்து ”சிங்கப்பூரா” என்றழைத்ததாகவும் மலாய் நாடோடிக் கதை கூறுகிறது. சிங்கம் என்ற சொல்லோடு ஊர் என்ற பொருள் தரும் பூரா என்ற மலாய் சொல்லை இணைத்து இளவரசர் ”சிங்கப்பூரா” என்றழைத்ததாக கூறுகின்றனர்.



