Showing posts with label தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ். Show all posts
Showing posts with label தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ். Show all posts

Saturday, 10 December 2016

திறப்புச் சொற்கள்

கையில் கொஞ்சம் பணம் இருந்தால் போதும். தன்னாலும் தமிழிலக்கியத்துக்கு ஒரு கவிதை நூலைத் தந்து விட முடியும் என்ற நம்பிக்கையின் வீக்கம் சீழ் பிடித்து கவிதைச் சந்தையில் இருந்து வாசகனை ஓட வைத்து விட்டது. கவிதைக்கு வந்த இப்படியான சோதனையும், வேதனையும் மெல்ல மற்ற படைப்பிலக்கியக்க வடிவங்களுக்கும் பரவத் தொடங்கி விட்டன. இந்தச் சூழலில் எந்த சமரசத்திற்குள்ளும் உட்படுத்திக் கொள்ளாமல் படைப்புகளின் மீது விமர்சனங்கள் முன் வைக்கப்படும் போதெல்லாம் அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் ஒலிப்பது வழக்கமாகி விட்டது. வழக்கொழிய வேண்டிய ஒன்று வழக்கமாகி வரும் சூழலில் விமர்சனங்கள் மட்டுமே படைப்புகளின் மீதான விவாதங்களை கிளர்த்தும் ஒரே வழியாகவும் இருந்து வருகிறது.

Friday, 11 November 2016

படிப்பில் இருந்து வாசிப்பிற்கு

ஆங்கிலத்தில் ரீடிங் (READING) என்ற ஒரு சொல்லைத் தமிழில் பயன்பாட்டு நோக்கில்படித்தல்”, ”வாசித்தல்என்ற இரு சொற்களாகப் பயன்படுத்துகிறோம். இவ்விரு சொற்களும் மிக நுட்பமான வேறுபாடுகளைத் தனக்குள் பொதிந்து வைத்திருக்கின்றது. இதை உணராமலே பயன்படுத்திக் கொண்டிருக்கும் அதேநேரம் இவ்விரண்டிற்குமான வித்தியாசத்தை அறிவது வாசிப்பு நிலையில் இருப்பவர்களுக்கு  மிகவும் அவசியம்.  

படிப்பதை எல்லோராலும் எந்த மெனக்கெடலுமின்றி செய்து விட முடியும். அதற்கு இருப்பதை அப்படியே ஏற்றுச் செல்வதற்குரிய அளவில் மொழி அறிவு இருந்தால் போதும். படிக்கும் போது அதில் முரண் கொள்ள, வாதிட எந்த வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் இல்லை, அப்படியே இருந்தாலும் அதைச் செய்ய முடியாது. பாடப்புத்தகங்கள், “எப்படிஎன்ற வழிகாட்டல்களைத் தரும் புத்தகங்கள் உள்ளிட்டவைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால், ஒரு படைப்பிலக்கியத்தை பாடப்புத்தகங்கள், பாட்டுப் புத்தகங்களை படிப்பதைப் போல அணுக முடியாது, காரணம் அது வாசகனுக்குக் கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுக்கிறது. தன் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கிறது. அதனால் தான்  ஒரு படைப்பை அப்படியே ஏற்று ஒரு வாசகன் கொண்டாடும் போது இன்னொரு வாசகனுக்கு அது முரணாக எழுந்து நிற்கிறது.

Saturday, 12 March 2016

ஆயுதமற்ற ஆயுதம்!

ஒரு கருத்தை, செயலாக்கத்தை, படைப்பை, நபரை அல்லது அமைப்பை மதிப்பீடு செய்து முன் வைக்கும் கருத்துக்களுக்குவிமர்சனம்என்று விக்கிப்பீடியா விளக்கம் தருகிறதுஇந்த மதிப்பீடுகளின் வழி வைக்கப்பட்ட, வைக்கப்படும் விமர்சனங்களில் பெரும்பாலானவை இன்று விமர்சனங்களுக்குரியதாகி விட்டது!

மனித குலம் தோன்றிய காலம் தொட்டே விமர்சனங்களும் தழைக்கத் துவங்கின. அதன் கட்டமைவிற்குள் தன்னுடைய வாழ்வியல் செயல்பாடுகளை உட்படுத்திச் சுய மதிப்பீடு, சுய பரிசோதனை என்று செய்து பார்த்த மனித மனம் அத்தகைய உட்படுத்தல்களைப் பொது வெளிக்குத் தந்த போது எழுந்த விமர்சனங்களின் வீரியம் மிதமாகத் தொடங்கி காலத்தின் சக்கர ஓட்டங்களுக்கேற்ப பல்வேறு கோர வடிவங்களாக  உருமாற ஆரம்பித்தன.

Tuesday, 8 December 2015

இடமும் இருப்பும்

இராமநாதனின் எழுத்துலக வாழ்வில் மிக முக்கியமானதொரு தினமாய் அன்றைய நாள் மலர்ந்திருந்தது. அவரின் நாவல் தென்கிழக்காசியாவில் தமிழ் மொழிக்கென வழங்கப்படும் உயரிய விருதுக்குத் தேர்வாகி இருந்தது. விருது வழங்கும் நாளுக்குச் சில வாரங்கள் இருந்த நிலையில் உள்ளூர் இலக்கிய அமைப்புகள் நடத்த ஆரம்பித்திருந்த பாராட்டு விழாக்களும், அதன் பொருட்டு நாளிதழ்களில் வரும் விளம்பரங்களும் தினமும் பார்க்கும் மனிதர்களிடம் கூட அவரைப் புகழுக்குரியவராக மாற்றி இருந்தது உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியான முழு நேர்காணல் அதை இன்னும் அதிகப்படுத்தி வைத்தது. அஞ்சல் பெட்டியை நிரப்பும் வாழ்த்துகளோடு, மின்னஞ்சலிலும் வாழ்த்துகள் குவிய ஆரம்பித்தன.  

சில வாரங்களுக்கு முன்பு வரை இவருடையதும், மனைவியுடையதுமான ஒரு ஜோடிச் செருப்புகளும், நடைப்பயிற்சிக்கு அணிந்து செல்லும் சப்பாத்துகளும் கிடக்கும் வாசல் முகப்பை இப்போதெல்லாம் பல ஜோடிச் செருப்புகளும், சப்பாத்துகளும் ஆக்கிரமிப்பதும், விலகுவதுமாய் இருந்தன