தென்
கிழக்காசிய விளையாட்டுகள் (SOUTH EAST ASIAN GAMES) என்பதன் ஆங்கில
முதல்
எழுத்தைச் சேர்த்துச் சுருக்கமாக “சீ
விளையாட்டு” (SEA GAMES) என்றழைக்கப்படும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை இதற்கு
முன்
சிங்கப்பூர் மூன்று
தடவை
(1973, 1983, 1993) ஏற்று
நடத்தியிருந்த போதும்
இம்முறை அது
சிங்கப்பூரின் பொன் விழாவைக் கொண்டாட்டத்தின் ஒரு
அங்கமாகவும் திகழ்ந்தது. இருபத்தெட்டாவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை ஜீன்
மாதம்
ஐந்தாம் தேதி
தொடங்கி பதினாறாம் தேதி
வரை
நடத்தி
கோலாகலப் படுத்திய சிங்கப்பூர் தன்
மணி
மகுடத்தில் மற்றுமொரு வைரத்தை சூட்டிக் கொண்டது.