”தமிழகப் பாளையங்களின் வரலாறு” - நூலுக்கு தினமலர் விமர்சனம்
நன்றி : தினமலர் நாளிதழ்
[தினமணி கலாரசிகனில் "தமிழகப் பாளையங்களின் வரலாறு” நூலுக்கான அறிமுகமும் - விமர்சனமும்]
தமிழக வரலாற்றில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாதது பாளையக்காரர்களின் வரலாறு. அவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களைப் போல அரசர்கள் அல்லர். நாயக்கர்களையும், மராட்டிய சரபோஜிகளையும் போல மன்னர்கள் அல்லர். மத வெறியால் நாடு பிடித்த நவாபுகளும் அல்லர். ஜமீந்தார்களை விட சற்று மேலான ஆளுமை உள்ள குறுநிலக்கிழார்கள். அவ்வளவே.
கிருஷ்ண தேவராயரின் விஜயநகரப் பேரரசால் உருவாக்கப்பட்டவர்கள் தான் பாளையக்காரர்கள். “பாலாறா” என்கிற தெலுங்கு சொல்லில் இருந்து “பாளையம்” என்கிற பெயர் உருவானது. “பாலாறா” என்றால் ராணுவ முகாம் என்று பொருள். அதை நிர்வாகம் செய்ய நியமிக்கப்பட்டவர்கள் பாளையக்காரர்கள் என்று அழைக்கப்பட்டனர். நாயக்கர் ஆட்சிக்கு முன்பே தமிழ்கத்தில் பாளையங்கள் சிற்றரசர்களுக்கு உரிய அதிகாரத்துடன் இருந்தன என்றும் சிலர் கூறுகிறார்கள்.
“ஈரோடு மாவட்ட வரலாறு” நூலில் இடம் பெற்றுள்ள அம்மைய நாயக்கனூர் ஜமீந்தார் வம்சாவளி ஆவணப்பதிவு தரும் செய்தி இது – “தளவாய் அரியநாத முதலியார் அவர்களும், விசுவநாத நாயக்கரும் இருவருமாக மதுராபுரிக்கு வந்து பாண்டியன் முன்னர் போர் புரிந்த கோட்டையைச் சுற்றி விசாலமாய் 72 கொத்தளங்களைக் கோட்டை போட்டு 72 கொத்தளத்துக்கும் 72 பாளையக்காரர்களையும் நேர்முகம் செய்கிறது”.
தன் முகநூல் பக்கத்தில் என் “அந்தமான் செல்லுலார் சிறை ஒரு வரலாறு” நூல் குறித்து எழுத்தாளர் ராம் தங்கம் எழுதியுள்ள அறிமுக உரை
சிறிய புத்தகம் என்றாலும் இதன் தகவல்கள் படுசுவாரசியமும், அதிர்ச்சியையும் தரக்கூடியது. ஒருமுறையாவது அந்தமான் சிறை சென்று பார்க்க வேண்டும் அங்கு காற்றோடு கலந்திருக்கும் புரட்சியாளர்களின் குமுறலைகளை கேட்க வேண்டும். அங்கு படிந்திருந்த போராளிகளின் ரத்த வாடைய முகர வேண்டும் என்று தோன்கிறது. டேவிட் பர்ரி என்கிற சர்வாதிகார 4 அடி கொடுங்கோலன் பற்றிய தரவுகள் வியக்க வைக்கிறது. அருமையான ஆய்வு நூல்!
தன் முகநூல் பக்கத்தில் என் “மெளன அழுகை” நூல் குறித்து ”வைசாலி செல்வம்” எழுதியுள்ள அறிமுக உரை
முகநூல் வழியாக கிடைத்த நண்பர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புத்தாண்டு பரிசாக எனது இல்லம் தேடி அனுப்பட்ட அன்பு பரிசு.. வீடு மாற்றத்தால் கண்ணில் படாமல் போன சில வாசிப்பு நூல்கள்.. இரண்டு நாட்களுக்கு முன்பு அலமாரியை தூர்வாரிய போது சிக்கிய நூலை இன்று காலை தான் படிக்க அமர்ந்தேன். ஒரு நூல் வாசிப்பு என்பது ஆசிரியரோடு நாமும் அந்த களத்தில் தன்னை மறந்து வசிக்கும் வாழும் தருணங்கள் ஆகும். சில நேரங்களில் அந்த உணர்வு நமக்கும் நிகழ்ந்திருக்கும். அதுபோலவே உணர்ந்தேன் சில இடங்களில். இது கவிதைத் தொகுப்பு நூல்.