Friday, 13 November 2015

இறைவனை அடையும் மார்க்கம்

 

திண்ணன் என்ற வேடவ குலத்தைச் சேர்ந்த இளைஞன் நண்பர்களோடு வேட்டைக்குச் சென்ற இடத்தில் மலையின் மீது இருந்த சிவலிங்கத்தைப் பார்த்து உள்ளம் உருகிப் போனான். யாருமில்லாத இந்தக் காட்டில் உறைந்திருக்கும் இறைவனை யார் பாதுகாப்பது? உணவு தருவது? என்று நினைத்தவன் தானே அவ்விரு காரியங்களையும் செய்ய முடிவெடுத்தான்.

இறைவனை அபிஷேகம் செய்வதற்கு வேண்டிய நீரை வாயிலும், அழகிய மலர்களைத் தலையிலும், தன் நண்பர்களோடு சமைத்த பன்றி இறைச்சியைக் கையிலும் ஏந்தி வந்து இறைவனுக்குப் படைத்தான். இரவெல்லாம் கண் விழித்து காவல் இருந்தவன் காலையில் நீராடச் சென்றான். தினந்தோறும் பூஜை செய்ய வரும் சிவகோசரியார் இறைவனுக்கு இறைச்சி படைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அபச்சாரம்….அபச்சாரம் எனக் கூறிக் கொண்டே எல்லாவற்றையும் சுத்தம் செய்து அபிஷேகம் செய்து விட்டு இல்லம் திரும்பினார் மறுநாளும் அப்படி இருப்பதைக் கண்டு இதைச் செய்தவர் யார்? எனக் காட்டும் படி இறைவனிடம் முறையிட்டார்.

Wednesday, 11 November 2015

சிறு பொறியாய் ஒரு கேள்வி

 

”திருமால் தரிசனம மற்றும் தசாவதாரம்” புத்தகத்தை வாசித்திருந்த நண்பர், ”படிக்கிறவன் நம்புற மாதிரி எழுதி இருக்கே.” என்றார். இந்தத் தொகுப்பு அப்படி அமைந்ததற்குக் காரணம் என் மகள் கேட்ட சிறு கேள்வி! இந்தத் தொகுப்பிற்கான குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டிருந்த காலத்தில் தான் மகளும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருந்தாள், அவளிடம் அலைபேசியில் பேசும் போது ஸ்கூலில் நடந்த நிகழ்வுகளைக் கேட்பேன். ஒருநாள்,”எனக்குக் கதை சொல்லுங்க” என்றாள். கதை கேட்கத் தெரிந்த அளவுக்குக் கதை சொல்லும் சாமர்த்தியம் இல்லாததால் வாசித்திருந்த புராணக்கதையை சிறு, சிறு வார்த்தைகளில் சொல்ல ஆரம்பித்தேன். 

Monday, 9 November 2015

"சுப்புடு" மேடைக் கச்சேரி செய்தால்!

தொடர், தொடர்பற்ற வேலைகளால் இம்மாதம் நண்பர்கள் அழைத்த நிகழ்வுகளுக்குச் செல்ல இயலாமல் போன நிலையில் நேற்று (08-11-2015) நடைபெற்ற தங்கமீன் வாசகர் வட்ட மாதாந்திர நிகழ்விற்குச் சென்றிருந்தேன்.

சில புதிய முகங்களின் அறிமுகத்தோடும் முகநூலில் பார்த்தவர்களை நேரில் பார்த்த சந்தோசத்தோடும் தொடங்கிய நிகழ்வுகளை இந்த மாத வாசகரான நண்பர் கீழை அ.கதிர்வேல் அவர்கள் நெறியாள்கை செய்தார். தன்னுடைய நாற்பது ஆண்டு கால பத்திரிக்கை அனுபவத்தின் அடிப்படையில் இதழ்களில் படைப்புகளின் மூலம் பங்களிப்பது குறித்தான தகவல்களை நெறியாள்கையில் சிறு, சிறு துணுக்குகளாக அவர் தந்திருக்கலாம். ஏமாற்றி விட்டார். அவருக்கே உரிய நகைச்சுவை நெறியாள்கையைச் சிறப்பாக்கியது.  

Friday, 6 November 2015

பெங்களூரு - வாசிகளுக்குத் தெரியுமா?

சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை சார்பாக சிங்கப்பூர் மலேசிய படைப்புகளுக்கு வருடந்தோறும் வழங்கப்படும்  கரிகாற்சோழன் விருது இம்முறை ஷாநவாஸ் அவர்களின் “அயல்பசி” நூலுக்குக் கிடைத்திருக்கிறது. இணையப் பக்கங்களில் இவருடைய கட்டுரைகளை வாசித்திருந்த போதும் நேரடித் தொடர்பில்லாமலே இருந்தேன். இவரோடு நட்பில் இருங்கள் என்ற குறிப்போடு  ஷாநவாஸின் வலைப்பக்க முகவரியை நண்பர் இராமேஸ்வரம் ரஃபி அனுப்பி வைத்திருந்தார். அதன் பின் ஷாநவாஸை ஒரு இலக்கிய நிகழ்வில் சந்தித்து அறிமுகம் செய்து கொண்டாலும் அவருடன் தொடர் உரையாடலுக்கு வாய்ப்பில்லாமல் போனது. சில மாதங்கள் சென்றிருந்த நிலையில் வேலையிடத்தில் இருந்த போது வந்த அலைபேசி அழைப்பில், "நான் ஷாநவாஸ் பேசுகிறேன். நீங்க புத்தகம் எல்லாம் எழுதி இருக்குறீர்களா? தெரியாமல் போச்சே. இப்பதான் கேள்விப்பட்டேன்" எனச் சொன்ன போது "அடடா நம்ம எழுத்தும் பாய ஆரம்பிச்சிருக்கே"  என நினைத்துக் கொண்டேன். அதன் பின் முகநூலில் இருக்கும் போதும், பேச நேரும் சமயங்களின் போதும் வாசகர் வட்டத்திற்கும், தன் உணவகத்திற்கும் வருமாறு அழைப்பு விடுத்த படியே இருந்தார். செல்வதற்கு நேரம் வாய்க்கவில்லை என்றெல்லாம் பொய் சொல்லத் தேவையில்லை.