Wednesday, 5 July 2017

தோல்வியிலிருந்து வெற்றி

தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தைமன்னிப்புஎன ஒரு திரைப்படத்தில் விஜயகாந்த் பேசும் வசனம் போல நம்மில் பலருக்கும் பிடிக்காத வார்த்தைதோல்வி”. அப்படியிருக்க எப்படி தோல்வியிலிருந்து வெற்றி பெற முடியும்? நீங்கள் விரும்பாத தோல்வியை உங்களுக்குப் பிடித்ததாக மாற்றிக் கொண்டால் முடியும். அப்படி மாற்றிக் கொள்வது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமல்ல.

தோல்வியிலிருந்து பாடம் படியுங்கள். தோல்வியை அனுபவமாக மாற்றுங்கள் என்று எங்கும் பேசுவதைக் கேட்கிறோம். எழுதுவதை வாசிக்கிறோம். ஆனால் அதைக் கடைப்பிடிக்கிறோமா? இந்தக் கேள்விக்கு நம்மில் பலரிடமும் தீர்க்கமான பதில் இருப்பதில்லை, தீர்க்கமான பதில்களை வைத்திருப்பவர்கள் தோல்விகளைக் கண்டு துவள்வதில்லை. அதையேத் தன் அடுத்த முயற்சிக்கான ஆரம்பமாக மாற்றிக் கொண்டு முன்னேறிச் செல்கின்றனர். அதனால் தோல்வி என்று நீங்கள் நினைக்கும் நிலையை இறுதியாக்கி அங்கேயே முடங்கி விடாமல் முன்னோக்கி நகர்ந்து கொண்டே இருங்கள். உடைந்து போய் விடாமல் அதிலிருந்து ஊட்டத்தைப் பெறுங்கள். அப்படி நகர்ந்தவர்களும், பெற்றவர்களும் மட்டுமே சாதித்திருக்கிறார்கள். வெற்றியாளராக தங்களை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.

Tuesday, 4 July 2017

காதலின் குறியீடு!

  • இந்தியாவின் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. முகலாய அரசர் ஷாஜஹானால் அவர் மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டப்பட்டது.
  • இராஜபுத்திர மன்னர் ஜெய்சிங்கிற்குச் சொந்தமான தோட்டமாக இருந்த இந்த இடம் பண்டமாற்று முறை மூலம் வேறு இடங்கள் கொடுத்துப் பெறப்பட்டது.
  • பாரசீக, முகலாயக் கட்டடக் கலை மரபுகளை உள்ளடக்கி தைமூர் சமாதி, ஹிமாயூன் சமாதி, டெல்லி ஜும்மா மசூதி ஆகிய கட்டியங்களின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு தாஜ்மகாலுக்கான வரைபடம் உருவாக்கப்பட்டது.
  • வெனிஸ் நகரச் சிற்பிவெரொனியோ”, துருக்கி நாட்டு கட்டிடக் கலைஞர்உஸ்தாத் இஷாகான்”, லாகூரைச் சேர்ந்தஉஸ்தாத் அகமதுஆகியோருடன் ஷாஜஹானும் இணைந்து வடிவமைத்த வடிவமைப்பு   தாஜ்மகால்!
  • தாஜ்மகாலைக் கட்டும் பணி 1631 – ல் தொடங்கியது.

Thursday, 29 June 2017

தன் அனுபவமாக்குங்கள்

இன்றேஇப்பொழுதே - இக்கணமே என்பது வெற்றியாளர்களின் வேதவாக்கு, இதன் உட்பொருள் உங்களின் செயலைத் தாமதிக்காமல் ஆரம்பியுங்கள் என்பதாகும். இதைப் படித்ததும் நானும் உடனே ஆரம்பிக்க வேண்டும் எனக் கிளம்பினீர்களேயானால் சுவற்றில் அடித்த பந்தாகத் திரும்பி புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்ந்து விடுவீர்கள். நடைமுறையில் உணர்ச்சி வயப்பட்டெல்லாம் எதையும் செய்து சினிமாக் கதாநாயகன் போல் ஒரே நாளில் வெற்றியைச் சுவிகரித்து விடமுடியாது. அதற்கு நிறைய முன் தயாரிப்புகள் தேவையாக இருக்கிறது

Saturday, 24 June 2017

மனநிலையை மாற்றுங்கள்

எல்லோரும், எப்பொழுதும் நம்மை ஏற்றுக் கொள்ள வேண்டும். நம் செயல்களை அங்கிகாரம் செய்ய வேண்டும் என நினைப்பது மனித இயல்பு. உண்மையில் அப்படி எதுவும் நிகழ்வதில்லை. உறவுகளுக்கிடையேயான பெரும்பாலான விரிசல்கள் இப்படியான நிராகரிப்புகளாலயே உருவாகின்றன. சாதாரண விசயங்களுக்கே இப்படியான நிலை என்கின்ற போது வெற்றி சார்ந்த முயற்சிகளுக்கு கேட்கவே வேண்டாம். ஆனால் இப்படியான மறுப்புகளைக் கடந்து வெற்றியை வசப்படுத்துவதில் தான் உங்களுடைய அடையாளம், தனித்தன்மை அடங்கி இருக்கிறது.