( சிங்கப்பூரில் இயங்கும் கவிமாலை என்ற அமைப்பு நடத்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசுக்குத் தேர்வான கவிதை )
உச்சரிப்பதைப் போல இலகுவாய் இல்லை
பிறருக்குக் கொடுப்பதும்
கொடுத்ததை நிறைவேற்றுவதும்.
பல நேரங்களில்
நம்பிக்கையாகத் தரப்பட்டும்
அவநம்பிக்கையாய் நீர்த்து விடுகிறது.
ஏதோ ஒரு நிலையில்
பொய்யான காரணங்களுக்குள்
கரைந்து போய் விடுகிறது.
நிறைவேற்றித் தருவதற்காக
மெனக்கெடும் போதெல்லாம்
சில உபதேசங்களே மிஞ்சுகிறது.
கொடுத்த வாக்குறுதியைக் காக்க
கடவுள் கூட
சுனங்கி நிற்கும் யுகத்தில்
கொடுப்பதை விடவும் மறுக்கவே விழைகிறேன்
நிறைவேறும் வரை
நம்பிக்கையற்று நகரும்
வாக்குறுதியை!
நன்றி : தமிழ்முரசு நாளிதழ்