சிங்கப்பூர்
தமிழ்மொழிப் பண்பாட்டுக்
கழகம் இவ்வாண்டு
ஒளவையார் விழாவை
நடத்தியது. கம்பன்
விழா, கந்த
சஷ்டி விழா,
அண்டா, குண்டா
அக்கப்போர்களுக்கு விழா
எனப் பார்த்தே
பழகி இருந்த
எனக்கு முகநூலில்
”ஒளவையார் விழா
2015” என்ற
அழைப்பிதழை பார்த்ததும்
சற்றே ஆச்சர்யமாகத்
தான் இருந்தது.
இதற்கு முன் இப்படியான விழாக்களுக்கு சென்றதில்லை என்பதால் இவ்விழாவில் என்ன மாதிரியான அங்கங்கள் இருக்கும் எனத் தெரிந்திராத நிலையில் இவ்விழாவிற்காக உருவாக்கப்பட்டிருந்த முகநூலின் சிறப்புப் பக்கத்தில் நான் அறிந்திருந்த நண்பர்களில் சிலர் அவர்களின் வருகையை உறுதி செய்திருந்ததாலும், நிகழ்வை ஏற்று நடத்தும் அமைப்பில் இருந்த தோழி அன்றைய தினம் மறு நினைவூட்டல் அழைப்பைக் கொடுத்திருந்ததாலும் நிகழ்விற்குச் செல்லும் துணிவு வந்தது.
