என் பதிப்பாளரும், கற்பகம் புத்தகாலயத்தின் நிறுவனருமான நல்லதம்பி அவர்கள் தன் மகனின் திருமண நிகழ்விற்கான அழைப்பிதழை அனுப்பியிருந்தார். அலைபேசி வழி அழைத்தும் சொன்னார். இன்றைய தேதியில் உள்ளூரில் வேறு ஒரு நிகழ்வு இருந்ததால் செல்ல முடியாத சூழலாகிப் போனது.
கடந்த வருடம் அவரைச் சந்தித்த போது அவரது மகனை - இன்று மணநாள் காணும் மணமகனை - அறிமுகம் செய்து வைத்தார். கணினித் துறையில் இருந்தவரை பதிப்புத் துறைக்குக் கொண்டு வந்திருப்பதாய் சொன்னார். கேட்டவுடன் அவரின் துணிவு ஆச்சர்யமாக இருந்தது. அதேநேரம் என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு நம்பிக்கை தருவதாகவும் இருந்தது.
வாழ்த்தை வார்த்தையில் தருவதற்கு பதில் வரைந்து தந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. உடனே நண்பரும், ஓவியருமான ஓவியர் ஆனந்தன் அவர்களின் நினைவு வந்தது. அவரிடம் ஆலோசனை கேட்டேன். செய்திடுவோம் என்றார். நான் நினைத்ததை விடவும் சிறப்பாய் மணமக்களின் சித்திரத்தைத் தீட்டிக் கொடுத்தார்.
அருமை...
ReplyDelete