Monday, 12 January 2015

வின்ஸ்டன் சர்ச்சில் 100 - 1

(திண்ணை இணைய இதழில்வின்ஸ்டன் சர்ச்சில் 100” நூல் குறித்து  கவிஞரும், கட்டுரையாளருமான தேனம்மை லெஷ்மணன் எழுதி உள்ள அறிமுக உரை)

வின்ஸ்டன் சர்ச்சில் பற்றிய தகவல்களைத் தொகுத்து தமிழில் வழங்கி இருக்கிறார் கோபி. மிக அரிய முயற்சி. இதில் நான் ஆச்சர்யப்பட்டது சர்ச்சிலின் மொழி வளம் பற்றி. மிகப் பெரும் அரசியல்வாதி என்பதைத் தவிர ஆற்றலுள்ள பேச்சாளரும் கூட என்பதையும் அரிய முடிந்தது. பலமுறை இறப்பின் விளிம்புகளைத் தொட்டவர். அரசியல் சதுரங்கத்தில் சில முறை வெற்றியடைந்தவர் என்று பல தகவல்களைப் பகிர்கிறார் கோபிஇரண்டாம் உலகப் போரைப் பற்றி மட்டுமே நமக்குத் தெரியும். அதன் முன் பின்னான அவரின் வாழ்வியல் பற்றி அருமையான விவரிப்பு இந்நூலில் உள்ளது. மிக அருமையான சுவாரசியமான தகவல் களஞ்சியம்.

நன்றி : திண்ணை.காம்