Wednesday, 11 February 2015

ரசிக்க – சிந்திக்க – 3

தன்னிடம் கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்த சிறுவனிடம் இன்று பயிற்சியாட்டத்தில் நன்றாக விளையாடினாயா? எத்தனை ஓட்டங்கள் எடுத்தாய்? என்று கேட்டார் பயிற்சியாளர். அந்த சிறுவனோ தன் நண்பர்கள் விளையாடிய கிரிக்கெட் மேட்சை பார்க்கச் சென்றிருந்ததால் பயிற்சியாட்டத்திற்கு செல்லவில்லை என்றான்

கோபம் கொண்ட பயிற்சியாளர் பளீர் என சிறுவனின் கண்ணத்தில் ஒரு அறைவிட்டார். பின்னர் அந்தச் சிறுவனிடம்யாரோ விளையாடுகின்ற மேட்சை பார்த்து கைதட்டப் போய் இருக்கிறாயே…….. உனக்கு அசிங்கமாக இல்லை. உன்னைப் பார்த்து மற்றவர்கள் கை தட்டி பாராட்ட வேண்டாமா? நீ மற்றவர்களுக்காக கை தட்டப் போகிறாயா? அல்லது மற்றவர்களிடமிருந்து நீ கை தட்டு வாங்கப்போகிறாயா? முடிவு செய்து கொள்என்றார். அந்த வார்த்தை அந்த சிறுவனின் வாழ்வை மாற்றிப் போட்டதுஅதன்பின் நாள் தவறாமல் பயிற்சி செய்து வந்த அந்த சிறுவன் பின்னாளில் உலகமே வியக்குமளவுக்கு புகழ் பெற்றான். அந்த சிறுவன் தான் சச்சின் டெண்டுல்கர்!

சச்சினைப் போல நீங்களும் மற்றவர்களின் பார்வையை உங்களின் பக்கம் திருப்ப வைக்க, உங்களின் வாழ்வை வெற்றிகரமானதாக ஆக்கிக் கொள்ள விரும்பினால் காரணங்கள் சொல்வதை அடியோடு விட்டு விட்டு காரியம் செய்யப் பழக வேண்டும். காரணம் சொல்பவர்கள் காரியம் சாதிப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியும் தானே!

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்