Tuesday, 24 February 2015

ரசிக்க – சிந்திக்க – 5

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனான ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக இருந்த சமயத்தில் அவரைச் சந்திப்பதற்காக அவருடைய நண்பர் ஒருவர் வந்தார். அப்போது லிங்கன் தன்னுடைய காலணிகளுக்கு பாலீஷ் போட்டுக்கொண்டிருந்தார். இதைக் கண்ட அந்த நண்பர் லிங்கனை செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் என சுட்டிக்காட்டி மட்டம் தட்டும் நோக்கத்துடன், ”மிஸ்டர் லிங்கன், “உங்கள் காலணிகளுக்கு நீங்களே பாலீஷ் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்என்று கேட்டார்.

நண்பரின் கேள்வியில் இருந்த கேலியையும், குதர்க்கத்தையும் அறிந்து கொண்ட லிங்கன் சற்றும் தாமதிக்காமல், ‘‘அப்படியானால் நீங்கள் யாருடைய காலணிகளுக்கு பாலிஷ் போடுவீர்கள்? என நண்பரிடமே திருப்பிக் கேட்டார். கேள்வி கேட்ட நண்பரோ விக்கித்துப் போய் தலை கவிழ்ந்தார். மற்றவர்களை கேலி செய்வதாக நினைத்துச் சொல்லும் சில விசயங்கள் நம்மையே திருப்பித் தாக்கி விடும். மற்றவர்களைக் கேலி செய்தல் அசிங்கம் மட்டுமல்ல ஆபத்தானதும் கூட என்பதை மறந்து விடாதீர்கள்.

நன்றிதமிழ்முரசு நாளிதழ்