குழந்தைகள் பாடம் படிக்கிறார்களோ இல்லையோ நம்மைப் படிக்க வைத்து விடுகிறார்கள். தமிழ் ஒர்க்ஷீட்டிற்காக பாரதியார் எழுதிய நூல்களின் பட்டியல் வேண்டும் என்றும் அதில் நான்கு எழுதி விட்டதாகவும் பாக்கி ஒன்று மட்டும் சொல்லுங்கள் என்றாள் மகள். நினைவில் இருந்தவைகளை அவள் முன்பே எழுதி விட்டதால் புதிதாகச் சொல்லலாம் எனச் சட்டென நெட்டைத் தட்டியதில் ”சந்திரிகையின் கதை” என்ற ஒரு தலைப்புக் கிடைத்தது. சொன்னதும் குறித்துக் கொண்டவள் அதன் பின் தன்னுடைய குறுக்கு விசாரணையை ஆரம்பித்தாள்.
அந்தக்கதை என்னன்னு ஓரலாச் (ORAL) சொல்லுங்க என்றாள். குழந்தைகள் விசயத்தில் உணமையைச் சொல்வது அவசியம் என்பதால் ”எனக்கும் தெரியாதே” என்றதும், ”சரி...தேடிப் படிச்சு வையுங்க, நான் சாயங்காலம் இல்லைன்னா நேரம் கிடைக்கும் போது கேட்டுக்கிறேன்” என்றாள்.
அவனவன் சீனப் புத்தாண்டு லீவுக்கு வீட்டுல தூங்கிக் கிடக்கானுக. ஊர் சுத்தக் கிளம்பிட்டானுக. நான் சந்திரிகையின் கதை தேடிக் கிட்டுக் கிடக்கேன். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேனும்னு சும்மாவா சொல்லி வச்சாங்க!