Saturday, 13 November 2021

கபடவேடதாரி - விமர்சனப் போட்டி - 24

அத்தியாயம் – 24

 (அக்னி குமாரி)

தான் உருவாக்கப்போகும் மகத்தான படைப்பான அதுல்ய குஸ நாயகியை (நிக் நேம் – அதுல்யா) பெயரிட்டு வளர்ப்பதற்கு முன் அவளுக்கான சரித்திரத்தை சூனியன் உருவாக்குகிறான். அவளுக்கு அப்பெயர் வைத்ததற்கான பெயர்க்காரணம் இன்னொரு சுவராசியம்.

பிரம்மா படைப்பில் பிறப்பின் மீது சரித்திரம் நிகழும். சூனியன் படைப்போ சரித்திரத்தின் மீது பிறப்பை நிகழ்த்துகிறது. அதுல்யா சரித்திரம் திருமழபாடியில் தொடங்கி அமெரிக்கா வரை நீள்கிறது. அவள் தன் குழுவினரோடு இணைந்து உருவாக்கிய தேடல் இயந்திரம் வழியே தன் பூர்வீகம் அறிந்து திருவாடுதுறைக்கு வருகிறாள். அதேநேரத்தில் நம்ம கோவிந்தசாமியும் தன் பூர்வீக பாதாளம் தேடி புதுச்சேரிக்கு வருகிறான்.

எதிர்பாராமல் அவர்களுக்கிடையே நிகழும் சந்திப்பு ரொமாண்டிக்கில் முடிகிறது. அவளின் அழகில் மெய் மறக்கும் கோவிந்தசாமி தான் கிளம்பி வந்தததற்கான நோக்கத்தை மறந்து போகிறான். அதுல்யா தன்னோடு வரும் படி அழைக்க காதல் மயக்கத்துக்கு முன் முன்னோர் சரித்திரமாவாது? மண்ணாங்கட்டியாது? என கோவிந்தசாமியும் அவளோடு திருவாடுதுறைக்கு கிளம்ப முடிவு செய்கிறான். சூனியனின் அதுல்யா சரித்திரம் சாகரிகாவுக்கு அடுத்த அதிர்ச்சியைத் தரும் என நினைக்கிறேன்.

No comments:

Post a Comment