Monday, 15 November 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 25

அத்தியாயம் – 25

 (ரூப செளந்தர்ய மகா மந்திரம்)

சாகரிகா கலங்கடித்துக் கொண்டிருந்த இடத்தை அதுல்யா கைப்பற்றினாள்.  வெண்பலகையில் அவள் இட்ட பதிவு சாகரிகாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதிலிருந்து மீள அதுல்யாவிடம் தனி உரையாடலை நிகழ்த்திய சாகரிகாவுக்கு அவள் சொன்ன தகவல் அந்த அதிர்ச்சியை இன்னும் கூடுதலாக்கியது.

கோவிந்தசாமியின் இன்னொரு முகமாக அதுல்யா காட்டும் அவன் செயல்பாடுகள் நம்மையும் ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன. அதற்கெல்லாம் சரிபட்டு வரமாட்டான் என எதன் பொருட்டு சாகரிகா கோவிந்தசாமியை தள்ளிவைத்தாலோ அந்த விசயத்தில் அதுல்யாவிடம் அவன் கில்லாடியாய் இருந்திருக்கிறான். இது உண்மையாக இருக்கப்போகிறதா? அல்லது அதுல்யாவை வைத்து சூனியன் ஆடும் சித்து விளையாட்டாக மாறப்போகிறதா? என்பது பா.ரா.வின் கைகளில் இருக்கிறது.

மேம்பட்ட ஜென் வாழ்க்கைத் தரத்துக்காக நீலநகரம் வந்த சாகரிகாவுக்கு இப்படியான சோதனைகளால் துயரம் அதிகமானது. விரட்டியடித்த கணவனின் வீராப்புகள் தெரிய வந்ததும் சராசரி பெண்ணாய் புலம்பி, புழுங்கிப் போகிறாள். துயரில் தூங்கிப் போனவளை தூக்கம் கழைந்து எழுந்து வந்த நிழல் அன்பு கொண்டு இரசிக்கிறது. கூடவே, இப்படிபட்டவள் கோவிந்தசாமியைப் பற்றி நன்கு அறிந்திருந்தும் கல்யாணம் வரை செல்ல என்ன காரணம் இருக்கும்? என நினைக்கிறது. அதற்கான விடை ஷில்பாவிடம் கிடைக்கலாம் என நினைக்கும் கோவிந்தசாமியின் நிழல் அவள் உறங்கும் இடத்திற்குச் செல்கிறது. அவளின் அழகில் மயங்கும் நிழலுக்கு ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கும் மனநிலை வருகிறது. தாஜ்மகாலை யார் வேண்டுமானாலும் இரசிக்கலாம். உரிமை கொண்டாடும் போது தானே பிரச்சனை எழும்!

ஒரே வீட்டில் இருக்கும் சாகரிகா, ஷில்பா, நிழல் இவர்கள் இணைந்து தனக்கு எதிரானவர்களை எதிர்பார்க்களா? அல்லது தனித்தனியாக இயங்குவார்களா? சாகரிகாவும், அதுல்யாவும் நேரில் சந்திப்பார்களா? இவர்களுக்குள் சூனியன், கோவிந்தசாமி, பா.ரா. புகுந்து கலகம் விளைவிப்பார்களா? என்பதெல்லாம் எதிர்பார்ப்புகளே.

No comments:

Post a Comment