சிங்கப்பூர் பொன் விழாக் கருத்தரங்கிற்காக “சிங்கப்பூர் புதுக்கவிதை - நோக்கும், போக்கும்” குறித்து முனைவர் கோட்டி திருமுருகானந்தம் அவர்கள் ஆய்வு செய்த கட்டுரைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட பல கவிதைகளில் ஒன்றாய் இடம் பெற்றிருக்கும் என் கவிதை
புராணத்தில்
பந்தயப் பொருளாய்
போர்க்களத்தில்
காரணப் பொருளாய்
அரசவையில்
அந்தப்புர மினுக்கியாய்
பத்திரிக்கையில்
கவர்ச்சிப் பதுமையாய்
இலக்கியத்தில்
சுமை தாங்கியாய்
காதலில்
ஏமாற்றுக் காரியாய்
கவிதையில்
கருப் பொருளாய்
வாழ்க்கையில்
வாரிசு சுமப்பவளாய்
இவை எல்லாம்
அறிந்தும் தெரிந்தும்
தெரியாதது போல
எத்தனை யுகங்களுக்கு
இப்படியே இருப்பதாய்
உத்தேசம் பெண்னே!
உறைவாளாய் இருப்பதை விட
உருவிய போர்வாளாய்
எப்போது மாறப் போகிறாய்?
நன்றி : சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்