Monday, 20 April 2015

ரசிக்க – சிந்திக்க - 12

தேவாலயத்தில் சொற்பொழிவை முடித்த போதகர் கூட்டத்தில் இருந்தவர்களிடம்என் அருமைச் சகோதரர்களே! என்னுடன் சொர்க்கத்திற்கு வர விரும்புபவர்கள் கை தூக்குங்கள்என்றார். அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரே ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் கையைத் தூக்கினார்கள். இதைக் கண்ட போதகர் அவரிடம், ”நீங்கள் சொர்க்கத்திற்கு வரா விட்டால் நரகத்திற்குப் போக விரும்புகிறீர்களா? என்றார்.

அதற்கு அந்த நபர், ”இல்லை ஐயா, நான் பாராளுமன்றத்திற்குச் செல்ல விரும்புகிறேன்என்றார். சொன்னதோடு மட்டுமில்லாமல் தன்னை விரட்டியடித்து வந்த தோல்விகளை எல்லாம் விரட்டியடித்து தேர்தலில் நின்று வெற்றி பெற்று தான் எண்ணிய படியே பாராளுமன்றத்திற்குள் உறுப்பினராக நுழைந்து பின்னர் அந்நாட்டின் அதிபராகவும் பதவியில் அமர்ந்தார். அவர் தான் அமெரிக்க அதிபராக இருந்த ஆப்ரகாம் லிங்கன்!

லிங்கனைப் போல் உங்கள் இலட்சியம் தெளிவாய், நேரத்திற்கேற்ப மாறாத வகையில் உறுதியாய் இருந்து அதை அடைவதில் நீங்கள் தீவிர கவனம் செலுத்தினால் போதும். உங்களாலும் நினைத்ததைச் சாதிக்க முடியும்

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்