Wednesday, 1 April 2015

ரசிக்க – சிந்திக்க - 9


ஓவியர் மைக்கேல் ஏஞ்சலோவைச் சந்தித்த அவருடைய நண்பர், “நான் உங்களைக் கடைசி முறை பார்த்த போது இருந்த மாதிரியே தான் இந்த ஓவியம் இப்பொழுதும் இருக்கிறது. உங்களுடைய வேலையில் எந்த வித முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லையேஎன்றார். அதற்கு மைக்கேல் ஏஞ்சலோ, “இல்லையே…..நான் நீங்கள் கடைசியாக இங்கே வந்த போது செய்து கொண்டிருந்த இந்தச் சிற்பத்தின் உதடுகளுக்கு அதிக அழகை அளித்துள்ளேன். தசைகளைப் புடைக்கச் செய்துள்ளேன். இதோ இந்தப் பாகத்தை மென்மைப்படுத்தி உள்ளேன்என்றார்.

அவருடைய நண்பரோ, “அவையெல்லாம் சின்ன, சின்ன விசயங்கள் தானேஎன்றார். அதற்கு ஏஞ்சலோ, “உண்மை தான். நீங்கள் நினைக்கின்ற அந்த சின்னச், சின்ன விசயங்கள் தான் இந்தச் சிற்பத்தையே பூரணமாக்குகிறதுஎன்றார். இப்படி சின்ன, சின்ன விசயங்களில் கூட கவனம் செழுத்தி செயல்பட்டதால் தான் ஏஞ்சலோவால் உலகப்புகழ் பெற்ற ஓவியராக பரிணமிக்க முடிந்தது. பத்தோடு பதினொன்றாக இல்லாமல் பத்தில் ஒன்றாய் வர முடிந்தது. வெற்றியாளர்கள் தங்களின் விலாசம் காட்டும் இது போன்ற அணுகுமுறையை நீங்களும் வாழ்வில் கடைபிடியுங்கள். வெற்றி உங்கள் விலாசமாக மாறும்

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்