Sunday 20 June 2021

வாழ்த்துமடலாய் சான்றிதழ்!

காலையில் எழுந்ததும் குட்மார்னிங் சொன்ன கையோடு தந்தையர் தின வாழ்த்தையும் மகனும், மகளும் சொன்னார்கள். காலை உணவிற்குப் பின் வாசிப்பில் இருந்தேன். என் அறைக்குள் நுழைந்த மகள், பிசியா, டென்ஷன் இல்லாமல் இருக்கீங்களா? என்று கேட்டாள். வாசிப்பை ஓரம் வைத்துவிட்டு என்ன செய்ய வேண்டும்? என்றேன்.

உங்களுக்கு நான் செய்த வாழ்த்துமடலை ஒரு இடத்தில் வைத்திருக்கிறேன். அதைக் கண்டடைவதற்கான முதல் க்ளு இது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு க்ளு வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றையும் நீங்கள் கண்டெடுக்கும் போது அதில் அடுத்த க்ளு இருக்கும். மொத்தம் ஆறு க்ளு. ஆறையும் கண்டு பிடித்து விட்டால் உங்களுக்கான வாழ்த்தை நீங்கள் எடுக்க முடியும் என்றாள். சுவராசியமாகத் தான் இருந்தது. இருபது நிமிடங்கள் பிடித்தது. 

வாழ்த்து மடலை எடுத்து விரித்த போது ஒரு தந்தையாய் எங்களுக்குரியவராக இருக்கிறீர்கள் என அவர்கள் தந்த சான்றிதழாய் அந்த வாழ்த்து இருந்தது. மகன் அவனுக்குரிய வாழ்த்துமடலை கையில் தந்து நெருக்கமாய் அனைத்து வாழ்த்து சொன்னான். இந்த சான்றிதழ்களுக்கு இன்னும் சரியானவனாய் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

No comments:

Post a Comment