அத்தியாயம் – 32
(பிரெஞ்சு விஎஸ்ஓபி)
பிறக்கும் போதே தன் படைப்பான முல்லைக்கொடியை தேசியவாதியாகப் படைத்ததற்காக சூனியன் நியாயமான ஒரு காரணத்தை சொல்லி விடுகிறான். அவளும், தான் ஒரு சங்கி தேசியவாதி என ஓயாது நினைவுபடுத்தி வரும் கோவிந்தசாமியும் ஒரு ஒயின்ஷாப் வாசலில் சந்தித்துக் கொள்கிறார்கள். தேசியவாதிகளாக ஒயின்ஷாப் வாசலில் சந்தித்துக் கொண்டது குறித்து வெண்பலகையில் முல்லைக்கொடி எழுதுகிறாள். நீலவனத்தில் கிடைக்கப்போகும் மந்திரமலர் மூலம் சாகரிகாவுடன் சேர்ந்து விடலாம் என நினைத்து வரும் கோவிந்தசாமி அதை வாசித்து விட்டு அலறுகிறான். அது போதாது என்று சகபயணி இன்னொரு தகவலைச் சொல்லி அவனை இன்னும் அதிர்ச்சி கொள்ள வைக்கிறார். பெண்கள் எல்லோருக்கும் கோவிந்தசாமி கிள்ளுக்கீரையாகவே இருக்கிறான். அதை அவன் மொழியில் சொன்னபோதும் எவரும் காது கொடுக்க தயாராக இல்லை.
கயாசுரன் கதை வழியே கயாவின் பெயர் காரணத்தை அறிய முடிந்தது. ”மனித வாழ்வு என்பதே சதிராடுதல் வழி சாத்தியமாதல்” என்ற நியதி தேவ உலகிற்கும் பொருந்திப் போகிறது.
தமிழ் அழகி - கோவிந்தசாமி கதை கோவிந்தசாமிக்குத் தான் அதிர்ச்சி, நமக்கு நல்லதொரு சுவராசியம். நீலநகரத்தில் நம்மை ஆட்கொண்ட அத்தனை பேரும் இப்பொழுது நீலநகர வனத்துக்கு வந்து விட்டார்கள். சூனியன், பா.ரா. என்ற இரு துருவங்களும் மோதிக் கொள்ளும் மையப்புள்ளியாக வனம் மிரட்ட காத்திருக்கிறது.
No comments:
Post a Comment