Wednesday 22 December 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 39


  அத்தியாயம் -39

 (கதாநாயகன்)

 

 

நீலநகர நுழைவாயிலில் கழற்றி விட்ட கோவிந்தசாமியை நீலநகரவனத்தில் சூனியன் சந்திக்கிறான். அவரவர் பக்க நியாயங்களை சொல்லிக் கொள்கிறார்கள். வழக்கம் போல் சூனியனே தன் தரப்பை நிலை நிறுத்துகிறான். பா.ரா., கடவுள் என இருவரையும் நேரம் வாய்க்கும் போதெல்லாம் வறுத்தெடுக்கும் சூனியன் இப்போதும் விட்டு வைக்கவில்லை. சாகரிகாவுடன் நிழல் நட்பானது, நிழலுக்காக அவள் சமஸ்தானம் அமைத்துத் தர இருப்பது ஆகிய தகவல்களை சூனியன் மூலம் அறிந்து கொள்ளும் கோவிந்தசாமி தான் வந்த நோக்கத்தை சூனியன் மூலமே நினைவு கொண்டு தனக்கு உதவும் படி கோரிக்கை வைக்கிறான்.

அதற்கு சூனியன், “நீ தேடிவந்த இரவுராணிமலர் நீ நினைப்பது போல உன்னை சாகரிகாவோடு சேர்த்து வைக்காது. மாறாக, உன்னை காலி பண்ண வைத்துவிடும் என்கிறான். இப்படியான சூழலில் கோவிந்தசாமி எங்கேனும் முட்டிக் கொண்டு அழுவான் அல்லது மயங்கிச் சரிவான் என்ற நியதிப் படி சூனியன் சொன்னதைக் கேட்டு சரிந்து விழ சட்டர் மூடப்படுகிறது.

பதில் வணக்கம் பாராது காலை வணக்கம் போடுபவர்கள், கவிதை என்ற போர்வையில் கவிதை எழுதுபவர்கள், தேசியம், திராவிடம் என சகட்டுமேனிக்கு இந்த அத்தியாயத்தில் பா.ரா. சுளுக்கெடுத்து விட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment