அத்தியாயம் – 40
(நான் உன் வெயில்)
கோவிந்தசாமியின் நிழல் சாகரிகாவை தனதாக்கிக் கொள்ள கொண்டிருந்த விரதத்தைக் கைவிடுகிறது. தன் சிந்தனைக் கதவைத் திறந்து விட்ட ”காதலி”யைத் (செம்மொழிப்ரியா) தவிர தன் மனதில் எவருக்கும் இடமில்லை என சத்தியம் கொள்கிறது. உனக்காக நான் என் சாம்ராஜ்யத்தையே துறப்பேன் என்ற காதல் மொழியை தன் காதலியிடம் சொல்லி காதலை வெளிப்படுத்துகிரது. இதெல்லாம் கலியுகக் காதலில் சகஜம் தான்!
தன் சொல்லுக்கு இயங்கும் சாட்டையாய் நிழலை ஆட்கொள்ளும் காதலி வெண்பலகை மூலம் சாகரிகாவிடமிருந்து நிழல் விலகி இருப்பதற்கான காரணத்தை எழுத வைக்கிறாள். தன் பங்கிறகு சாகரிகாவின் கடந்த கால திகிடுதத்தங்களையும், கபட நாடகத்தையும் வரிசைப்படுத்தி நீலநகரத்தின் கலாசாரத்துறைச் செயலாளராக அவள் ஆவதற்கான வாய்ப்புக்கும் வேட்டு வைக்கிறாள். போதாக்குறைக்கு கோவிந்தசாமியின் பெயரையும் இந்த விவகாரத்திற்குள் இழுத்து விடுகிறாள்.
தனக்குத் தரப்பட்ட அசைன்மெண்டை வெற்றிகரமாக முடித்த காதலி என்ற செம்மொழிப்ரியா காரியம் முடிந்ததும் கை கழுவுவதைப் போல நிழலை கழற்றி விட்டு தன் வழியே சென்று விடுகிறாள்.
இவர்களின் பதிவுகளை சாகரிகா வாசித்தாளா? இல்லையா? இனி வரும் அத்தியாயத்தில் விடை கிடைக்கும்.
No comments:
Post a Comment