Monday, 13 December 2021

கபடவேடதாரி - விமர்சனப்போட்டி - 36

அத்தியாயம் – 36 

(பாரா எனும் அயோக்கியன்)

இந்தத் தலைப்பை பா.ரா.விடம் நேரடியாக எவரேனும் சொன்னால் அதற்கு அவரின் எதிர்வினை எப்படியிருக்கும்? எனத் தெரியவில்லை. ஆனால், சூனியன் சர்வசாதாரணமாக சுழற்றி அடிக்கிறான். சத்தியசோதனை போல பா.ரா.வே தன்னைப் பற்றி மதிப்பிடும் சுயசோதனை போலும்! போகட்டும்.

இந்த அத்தியாயத்தில், தன் படைப்பாக்கத்தில் தனக்கு நிகர் தான் மட்டுமே! இந்த விசயத்தில் கடவுள் கூட என்னை நெருங்கமுடியாது என மார்தட்டும் சூனியன் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு என்பதையும் மறுக்கவில்லை. கடவுள் படைப்பில் புறத்தோற்ற வடிவமைப்பு குறித்து வியக்கும் சூனியன் அதை நமக்கெல்லாம் விவரித்துக் காட்ட ஷில்பாவை நம் முன் நிறுத்துகிறான். அவன் வர்ணனையுடானா காட்சியை மனதிற்குள் நாம் ஓடவிட்டால் ஷில்பாவை அழகுப் பதுமையாய் நேரில் காணும் பாக்கியத்தைப் பெற முடியும்.

சாகரிகாவையும், ஷில்பாவையும் சந்திக்கும் சூனியன் ஷில்பாவின் தலைக்குள் இறங்கி தகவல் சேகரிப்பை ஆரம்பிக்கிறான். பா.ரா.வுக்கும், ஷில்பாவுக்கும் என்ன தொடர்பு? பா.ரா.வை ஷில்பா இந்த அதகளத்திற்குள் எப்படி இறக்கி விட்டாள்? போன்ற பல தகவல்கள் அவனுக்குக் கிடைக்கிறது. கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு சூனியன் என்ன செய்ய காத்திருக்கிறான்? என்பது புரியாத புதிர்.

உயிர்த்தோழி எல்லாம் சும்மாவா? என சாகரிகாவுக்கும், ஷில்பாவுக்குமான உறவு குறித்த சூனியனின் சிரிப்பு நம்மைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.

No comments:

Post a Comment