அத்தியாயம் – 37
(யாளிக்குழம்பு)
நூலக சமஸ்தான வாசலை சாகரிகாவும், ஷில்பாவும் வந்தடைகிறார்கள். வாசலில் முதிர்ந்த யாளி ஒன்று மயங்கிக் கிடக்கிறது. யாளிகள் பற்றிய சுவராசியத் தகவல்களோடு அத்தியாயம் விரிகிறது. நூலகர் மூலம் சாகரிகாவை அடையாளும் கண்டு கொள்ளும் வனவாசிகள் அவளைச் சூழ்ந்து கொள்கிறார்கள். அழகுக் குறிப்பெல்லாம் பெற்றுக் கொள்கிறார்கள். வாசிக்கும் நமக்கும் அழகுக்குறிப்புகள் கிடைக்கிறது. வாய்ப்பிருப்பவர்கள் செயல்படுத்திப் பார்க்கலாம்!
நூலகத்திற்குள் இருக்கும் வெண்பலகையில் ஓடும் சல்லாபக் காட்சியை ஷில்பா கவனிக்கிறாள். சாகரிகாவை அழைத்து அவளிடமும் காட்டுகிறாள். கோவிந்தசாமியின் சல்லாபம் அவளைக் கோபம் கொள்ள வைக்கிறது. (சாண்ட்விச் மஜாஜை தமிழ்அழகியும், முல்லைக்கொடியும் நிகழ்த்துகிறார்கள். இந்த அத்தியாயத்தில் ”முல்லைக்கொடி”க்கு பதிலாக “செம்மொழிப்ரியா” என வருகிறது. அவளும் தூண்டலுக்கும், துலங்களுக்குமானவள் தானே!) சாகரிகா “சங்கி” என சகட்டுமேனிக்கு கோவிந்தசாமியை விரட்டியடித்த போதும் வேறு பெண்ணுடன் அவன் சல்லாபம் கொள்வதை ஏற்க அவள் மனம் ஒப்பவில்லை. அவளால் அதை பொறுக்க முடியவில்லை. ஷில்பாவின் நக்கலுக்கு பொங்கி எழுகிறாள். திருப்பு முனையாய் கோவிந்தசாமியும் நூலகத்திற்குள் நுழைகிறான் நரகேசரியுடன்! என்ன நிகழப்போகிறது? காத்திருப்போம்.
No comments:
Post a Comment