Tuesday 30 September 2014

பிரதி எடுக்காதீர்கள்

வால்மிகி எழுதிய இராமாயணம் போலவே தன்னைப் பற்றியும் ஒரு காவியம் எழுத வேண்டும் என தன் அவைப்புலவர்களை அழைத்து கூறினான் முகம்மது பின் துக்ளக்.

புலவர்களோ எதுவும் பேசாமல் ஒருவரையொருவர் பார்த்து விழித்துக் கொண்டனர்.

என்ன விழிக்கிறீர்கள்? இராமனை விட நான் எந்த விதத்தில் குறைந்தவன்? உங்களால் எழுத முடியுமா? முடியாதா? என்று தன் அவைப்புலவர்களிடம் கர்ஜித்தான் துக்ளக்.

ஏன் முடியாது? உங்களுக்கு என்ன குறை? ஆனால் ஒரு சந்தேகமிருக்கிறது. அதைத் தாங்கள் தீர்த்து கொடுத்தால் இன்றே அதற்கான வேலைகளை ஆரம்பித்து விடலாம் என்றார் ஒரு புலவர்.

என்ன சந்தேகம்? என்றான் துக்ளக்.

Saturday 6 September 2014

சின்ன வித்தியாசத்தில் அர்த்தப்படும் வாழ்க்கை!

ஆசிரியர் தினத்தில் உன் மிஸ்க்கு என்ன கொடுத்தாய்? என்று மகனிடம் கேட்டேன்.

நானே செஞ்சிட்டுப் போன கிரிட்டிங்கார்டோடு ஒரு சாக்லெட்டும் சேர்த்து கொடுத்தேன் என்றான். அதன் பின் அவன் சொன்ன விசயம் தான் அற்புதம். உன் பிரண்ட்ஸ்லாம் மிஸ்க்கு என்ன கொடுத்தாங்க? என்றேன்.  

என் பிரண்ட் எதுவும் கொண்டுவரல. நான் கொடுத்ததை பார்த்துட்டு அவனும் கொடுக்கனும்னு சொன்னான். மிஸ்க்கு கொடுத்தது போக எனக்கிட்ட இருந்த ஒரு சாக்லெட்டை அவனுக்கு கொடுத்தேன். அந்த சாக்லெட்டோட ஒரு அட்டையில கிரிட்டிங் எழுதி அவனும் மிஸ்க்கு கொடுத்தான் என்றான்.

Wednesday 3 September 2014

அபிப்ராயங்களை அலட்சியப்படுத்துங்கள்

நதிக்கரை ஓரத்தில் முகாமிட்டிருந்த ஆட்டு மந்தைக்கு அருகில் தன் குட்டியை ஈன்றெடுத்த புலி அங்கேயே இறந்து போக ஆடுகளோடு வளர்ந்த அந்த புலிக்குட்டி ஆட்டுக்குட்டியைப் போலவே மாறிப்போனதுஒருநாள் அவ்வழியே வந்த ஒரு புலி ஆட்டுமந்தைகளோடு சுற்றித்திரிந்த அந்த புலிக்குட்டியை இழுத்துச் சென்று அதன் வாயில் மாமிசத்தை திணித்து நீயும், நானும் புலிகள். மாமிசம் உண்டு வாழ்பவர்கள். உன்னைப் பார்த்தால் மிரண்டு ஓடக்கூடிய ஆடுகளோடு சேர்ந்து நீயும் ஆடாகவே மாறிவிட்டாயே என்று கூறியதும் தான் அந்த புலிக்குட்டி தன்னுடைய சுயத்தை அறிந்ததாம். இராமகிருஷ்ண பரமஹம்சரின் கதையில் வரும் இந்த புலிக்குட்டி உணர்ந்ததைப் போல நீங்கள் உங்களை எப்பொழுது உணர ஆரம்பிக்கிறீர்களோ அப்பொழுது உங்களின் சுயம் தானாக வெளிப்பட ஆரம்பித்து விடும். ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. புலிக்குட்டிக்கு அதன் சுயத்தை கண்டறிய உதவிய புலியைப் போல நமக்கு யாரும் உதவ வரமாட்டார்கள். மாறாக நாமாகவே முயன்று சுயமாய் சுடர் விட்டால் தான் உண்டு