Thursday 30 January 2020

முரல் நீங்கிய புறா - கூரிய ஓசை

எப்பொழுதும் தனக்கே உரித்தான ஒரு வித ஒலியை எழுப்பிக் கொண்டே இருப்பவைகள் புறாக்கள். அவைகள் மசூதிகளில், தேவாலயங்களில், ஆலயங்களில் தனக்குக் கிடைத்த இடங்களில் அமரும் போது அமைதி காக்கின்றன. எங்கெல்லாம் அமைதி காக்கப்பட வேண்டுமென அவைகளுக்கு எவரும் போதித்திருக்கவில்லைநமக்கோ ஆண்டாண்டு காலமாய் எவரோ ஒருவர் போதித்துக் கொண்டே இருக்கிறார். நாம் காது கொடுப்பதில்லை, அமைதியை மீட்க வேண்டிய இடத்தில் முட்டிக் கொள்கிறோம். முழங்கி நிற்கிறோம். முரண்டு பிடிக்கிறோம். புறாக்கள் முரல் நீங்கி இரை எடுக்கும் மதமற்ற இறைமையை நாம் முரல் கொண்டு இறைமையை இரையாக்கிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தலைப்புக் கவிதைக்குச் சென்றடையும் வழிகள் எங்கும் நிரவி இருக்கும் ஏனைய கவிதைகள் நாம் வாழும் எளிய வாழ்வின் ஊடாக நம்மில் ஆழ்ந்திருக்கும் காதலையும், காமத்தின் உச்சத்தை நெறிப்படுத்தலையும், எதார்த்தத்தையும் முன் நிறுத்திமுரல் நீங்கிய புறாவாய் உரையாடுகின்றன. பகடி செய்கின்றன. மீண்டும் ஒரு திறனாய்வுக்கு உட்படுத்துகின்றன. புது எழுத்து வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுப்பு சம்பத்ஜியின் இரண்டாவது தொகுப்பு.

வாசம் தரும் ரோஜாக்களை வாங்க அதன் வாசம் நுகர்ந்த படியே பருவ வித்தியாசமின்றி பேரம் பேசிக் கொண்டிருக்கிறோம். அதேநேரம் வாசத்திற்குப் பதில் நாற்றத்தின் நாற்றங்கால்களாய் இருக்கக்கூடிய கட்டணக்கழிவறைக்கு மூக்கைப் பிடித்த படி பேரம் பேசாமல் போய் வருகிறோம். வாழ்தலில் இருக்கும் முரணை நம் எதார்த்த  நிகழ்விலிருந்து ஆரம்பித்து வைக்கிறார்.

ஈபிள் கோபுரம்

திரைப்படங்களில், வாழ்த்து அட்டைகளில், அலங்கார வளைவுகளில் இடம் பெற்றிருக்கும் ஈபிள் கோபுரம் அதன் உயரம் போலவே சுவராசியமான பல தகவல்களைக் கொண்டது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் இக்கோபுரம் அமைந்திருக்கும் இடத்தின் பெயர்சாம்ப்டிமார்”. இவ்விடம் ஒரு அணிவகுப்பு மைதானமாகும்.

1789 – 1799 ல் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பிரெஞ்சு புரட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியானஎக்ஸ் பொசிசன் யுனிவர்செல்எனும் உலகக் கண்காட்சி விழாவிற்கான நுழைவாயிலாக 1889 ல் இக்கோபுரம் கட்டப்பட்டது. இதைக் கட்டிய பொறியாளரின் பெயர்அலெக்சாண்டர் கஸ்டாவ் ஈபிள்”.  அவர் பெயராலயே அதுஈபிள் கோபுரம்என்றழைக்கப்பட்டது.

இக்கோபுரம் ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டின் மற்றொரு நகரான பார்சிலோனாவில் அமைப்பதாக இருந்தது. ஆனால், கோபுரத்தின் உயரம், வடிவமைப்பு, அதை அமைக்கும் விதம் ஆகியவைகளைச் சுட்டிக் காட்டி பார்சிலோனா நகராட்சி அனுமதி தர மறுத்து விட்டது. அதன் பின்னரே பாரீஸ் நகரம் தேர்வு செய்யப்பட்டது.

Monday 27 January 2020

பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்

வேக வாழ்க்கையில் எதையும் கணிக்கத் தவறுவதைப் போல கவனிக்கவும் தவறி விட்டோம். பிரபஞ்சத்தைச் சுற்றிலும்  நிகழும் அத்தனை நிகழ்வுகளும் ஏதோ ஒரு அதிசயத்தை, ஆச்சர்யத்தை, ஆர்ப்பரிப்பை, அற்புதத்தை, வாஞ்சையை தன்னுள் புதைத்தே வைத்திருக்கிறது.  

போகிற போக்கிலோ, மேம்போக்காகவோ வாழ்க்கையை நகர்த்திப் போகிறவர்களால் அவைகளை இரசிக்கவும், அனுபவிக்கவும் முடியாது. கொஞ்சம் மெனக்கெட்டால், ஒரு குழந்தையின் உற்று நோக்கலோடு அணுகினால் சாத்தியம் என்பதற்கான சான்றாய் சந்தியா பதிப்பக வெளியீட்டில்பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்பூத்திருக்கின்றது

சுருங்கிய சொல், விரிந்த பொருள் என்ற கட்டுமானத்தில் எந்த சமரசமும் செய்யாததாலயே குறள் இன்று வரையிலும் பல குரல்களில் களமாடிக் கொண்டிருக்கிறது. வள்ளுவனின் குறளடியை விரித்து, சீரைச் சுருக்கி படைப்பின் கட்டுமானத்தில் நின்று நெய்யப் பட்டிருக்கும் இந்தக் கவிதைத் தொகுப்பும் அந்த மறைநூலைப் போல நம் மனதிலும், சிந்தனையிலும் நின்று களமாடுகிறது.

Wednesday 22 January 2020

கவிதை என்ன செய்யும்?

மகளுடனான உரையாடலின் போது, ”மூன்று வரியில் கவிதை இருந்தால் அதுக்குஹைக்கூ”  ன்னு பேராம்லஎன்றாள்.

ஹைக்கூ என்பது தனி வடிவம். அதன் பல வரையறைகளுள் ஒன்று மூன்று வரியில் இருக்க வேண்டும். அந்த வரையறையை மட்டும் மனதில் கொண்டு எழுதப்படும் மூன்று வரிக் கவிதைகளை இப்பொழுது எல்லோரும் ஹைக்கூ என அழைத்து வருகிறார்கள் என்றேன்.

அப்படியா? என்றாள்.

என்ன திடீர்னு கவிதை மேல ஆர்வம்? என்றேன்.

எங்கள் தமிழ் பாடத்தில்

இந்தக் காட்டில்

எந்த மூங்கில்

புல்லாங்குழல்?” –