கவிதை என்கிற வட்டத்தைத் தாண்டி கதைகள், கட்டுரைகள் பக்கம் வந்த போது நாளிதழ்கள் வெளியிடும் சிறப்பு மலர்கள் மூலமாக உங்களின் கதைகள் எனக்கு அறிமுகமானது. அந்த இதழ்களில் இருக்கும் பிற கதைகளைப் போல உங்கள் கதையில் மனம் ஒட்டாது. கடந்து விடுவேன். எனக்கிருந்த வாசிப்பு பயிற்சியின்மை அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். உங்கள் கதைகளை அணுகுவது என்னளவில் சிரமமாக இருந்த சமயத்தில் நண்பர் ஒருவர் ஏழாம் உலகம் நாவலை தந்தார். சில பக்கங்கள் மட்டுமே கடந்த நிலையில் இன்றும் அந்நாவல் வாசிப்பிற்க்காக காத்திருக்கிறது. இந்த சூழலில் அறம் கதைகள் வந்தது. உங்களின் இணைய பக்கத்தில் வாசித்தேன்.
Tuesday, 11 May 2021
Saturday, 1 May 2021
அ-காலம் - கடிதம்
Bynge.in- ல் சாரு நிவேதிதா ”அ-காலம்” என்ற பயணக்கட்டுரைத் தொடரை எழுதி வருகிறார். "நிலவு தேயாத தேசம்" தொடரை அடுத்து அவர் எழுதும் இரண்டாவது தொடர் இது. அத்தொடர் குறித்து சாருவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதை அத்தியாயம் 10 ன் இறுதியில் இணைத்திருக்கிறார்.
Tuesday, 1 December 2015
மெளன அழுகை - 6
என் “மெளன அழுகை” கவிதைத் தொகுப்பு குறித்து மலேசியாவின் பன்முகப்படைப்பாளி ”வல்லினம்” ம. நவீன் எழுதியிருக்கும் விமர்சனக் கடிதம் -
![]() |
ம. நவீன் |
அன்புமிக்க மு. கோபி சரபோஜி, முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். உங்கள் ‘மௌன அழுகை’ தொகுப்பை வாசித்தேன். பொதுவாகக் கவிதைகள் குறித்த எனது அபிப்பிராயங்களை முதலில் சொல்லிவிடுகிறேன்.
நான் எனது தொடக்ககால கவிதை வாசிப்பை வைரமுத்து, மேத்தாவிலிருந்துதான் தொடங்கினேன். தமிழில் தீவிர இலக்கிய வாசிப்பு எனக்கு அறிமுகமாகும் முன் திருக்குறள்தான் நான் கவித்துவத்தை அறிய உதவியாக இருந்தது. அப்போதெல்லாம் வீட்டுக்கு வரும் எந்த அழைப்பிதழையும் பெரும்பாலும் கவனமாக வாசிப்பேன். அதில் அப்படி ஓர் ஆர்வம்.
Friday, 17 July 2015
தந்தைக்கு...
தமிழ்கலை மனமகிழ் மன்றம் தஃபர்ரஜ் (TAFAREG) – ரியாத் - சவுதி அரேபியா என்ற அமைப்பால் நடத்தப்பட்ட எழுதுகிறேன் ஒரு கடிதம் – முகநூல் கடிதப் போட்டிக்கு எழுதிய கடிதம்
--------------------------------------------------------------------------------------------------------------------
அன்புள்ள அப்பாவுக்கு நான் நலமாக உள்ளேன். நீங்கள் நலமா? அம்மா மற்றும் வீட்டில் உள்ளவர்கள் நலன்களைக் கேட்டதாகச் சொல்லுங்கள். கடந்த வாரம் வீட்டிற்கு போன் செய்து எல்லோரிடமும் பேசினேன்.
குட்டிப்பையனோடு நீங்கள் வெளியில் போயிருப்பதாய் அம்மா சொன்னார்கள். நிற்க -
Thursday, 16 July 2015
மூத்த படைப்பாளிக்கு
தமிழ்கலை மனமகிழ் மன்றம் தஃபர்ரஜ் (TAFAREG) – ரியாத் - சவுதி அரேபியா என்ற அமைப்பால் நடத்தப்பட்ட எழுதுகிறேன் ஒரு கடிதம் – முகநூல் கடிதப் போட்டிக்கு எழுதிய கடிதம்
-----------------------------------------------------------------------------------------------------------------------
என் மண்ணின் மைந்தரும், மூத்த படைப்பாளியுமான திரு. ஹிமானா சையத் சார் அவர்களுக்கு. வணக்கம்.
இரமலான் நோன்பு வாழ்த்துகள்.
“அன்பு, நட்பு, உறவு எல்லாம் பூர்வ ஜென்மத் தொடர்பு” என கீதை கூறுவதைப் போல ஏறக்குறைய பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் உங்களை முகநூல் வழி அறிந்து மீண்டும் தொடர்பு கொண்டேன். நேரில் சந்தித்து பேச வேண்டும் என நினைத்தாலும் வேலை நேரச் சூழலால் தங்களைச் சந்திக்க முடியாத நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.