Showing posts with label என் நூல்கள். Show all posts
Showing posts with label என் நூல்கள். Show all posts

Tuesday, 27 April 2021

தமிழகப் பாளையங்களின் வரலாறு

பாளையக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடைய ஆட்சி முறை எப்படி இருந்தது? வரி வசூலித்து, சட்டம் அளிக்கும் பொறுப்பில் இருந்த பாளையக்காரர்கள் வரிகட்ட மறுத்தது எப்படி? தமிழகப் பாளையங்கள் குறித்த விவரங்களை எல்லாம் திரட்டி, விறுவிறுப்பாக எழுதப்பட்டிருக்கும் புத்தகம் இது.  

தமிழகப் பாளையங்களின் வரலாறுஇரண்டு நூற்றாண்டு தமிழக வரலாறு என்றும் சொல்லலாம்.

- தினமணி - கலாரசிகன்.

Friday, 18 January 2019

அந்தமான் – செல்லுலார் சிறை

அகிம்சைவாதிகள் ஆங்கிலேயர்களிடம் அடிபட்டுக் கொண்டே குரல் கொடுக்க, அடித்தவனின் அடித்தளத்தையே ஆட்டுவித்து குரல் கொடுத்தவர்கள் புரட்சியாளர்கள். அவர்களை ஒடுக்க அவர்களைக் கொண்டே உருவாக்கப்பட்டது தான்அந்தமான்செல்லுலார் சிறை”! தாங்கள் அடைபட்டுக் கிடக்கப் போகும் சிறைச்சாலையை தாங்களே கட்டிக் கொண்டதும், கட்டிய சிறையில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதுமான வரலாற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கிற சிறைச் சாலையின் கதை இது……….

Tuesday, 6 December 2016

காழிநகர் நாயகன் சீர்காழி உ. செல்வராஜு

மறைந்த வெற்றியாளர்கள் தந்து போன வழிகாட்டல்கள் சார்ந்த அனுபவங்களை விட நம் காலத்தில் வெற்றி பெற்று நம்மோடு பயணிப்பவர்கள் தரும் அனுபவங்கள் காலத்தோடு இயைந்தவைகளாக இருக்கும் என்பது இத்தொகுப்பின் உருவாக்கத்திற்கு அடிப்படையான காரணம் என்பேன்

பல நூறு பக்க சுயமுன்னேற்ற நூல்களை வாசித்து நீங்கள் பெறும் அத்தனை உள்ளார்ந்த விசயங்களையும் இத்தொகுப்பில் விரவி நிற்கும் நிகழ்வுகளின் வாயிலாக உங்களால் நிச்சயம் பெற முடியும்.

Wednesday, 30 March 2016

சலனக்கிரீடம்

மாறுபட்ட சந்தர்ப்பங்களில், மனநிலைகளில், தாக்கங்களில், வாழ்வியல் நெருக்கடிகளில் என்னைச் சலனப்படுத்திய விசயங்களே கவிதைகளாக இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இக்கவிதைகள் எனக்கு மட்டுமேயான அனுபவங்களாக இல்லாமல் இருப்பதும்உங்களின் அனுபவங்களை இந்தக் கவிதைகளின் வழியாக நீங்களும் நீட்டிப் பார்க்க முடியும் என்பதும் இத்தொகுப்பின் பலம் என நினைக்கிறேன்

இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்தும் பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் வெளியானவைகள்