Friday 20 January 2017

”மின்னூல்” எனும் கனவு!

இரண்டு வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்த போது மலைகள் இதழின் ஆசிரியரும், நண்பருமான சிபிச்செல்வன்கிண்டில்பற்றிக் கேட்ட போது அப்படின்னா என்ன? எனக் கேட்டேன். புத்தகங்களை எப்படி படிக்கிறீங்க? என அடுத்த கேள்வியை வீசினார். சம்பந்தமில்லாத கேள்வியா கேட்கிறாரே என நினைத்துக் கொண்டு நூலகத்தில் இருந்து எடுத்து வந்து வாசிக்கிறேன் என்றேன். அந்த பதிலில் என் நவீனத்தின் ஞானத்தை அவர் கண்டுபிடித்திருப்பார் என்றே நினைக்கிறேன். “கிண்டில்பற்றியும், அதன் பயன்பாடு பற்றியும் சொன்னார். சிங்கப்பூரில் இருந்து கொண்டு இத்தனை ஞானசூன்யமா இருந்திருக்கோமேடா!  என நினைத்துக் கொண்டு இணையத்தில் அறிந்து கொள்ள முனைந்ததில் மின்னூலின் அவசியம் குறித்து எழுதப்பட்ட சில கட்டுரைகளையும் வாசிக்க நேர்ந்தது. அதன் பிறகு மின்னூல் சார்ந்து இருந்து வந்த பிரமிப்பு விலக ஆரம்பித்தது.

Sunday 8 January 2017

சொந்தமாகச் சிந்திக்கலாம்!

முன்னேற்றத்திற்காகவே பூமியில் பிறந்துள்ளோம். ஒவ்வொரு நிமிடமும் நாம் முன்னேறவில்லையானால் வாழ்க்கை சுவையற்று சலிப்புத் தட்டி விடும்என்கிறார் அன்னை. சுவையான முன்னேற்றத்திற்கு சிந்தனை அவசியம். சிந்தனை மட்டுமே இது தான் முடிவு என்று முடிவாகச் சொல்லப்பட்ட விசயங்களை உடைத்தெறிந்து மேலும் முன்னேற வைக்கிறது. புவிஈர்ப்பு விசை இருப்பதால் மேல் செல்லும் எந்தப் பொருளும் பூமியை நோக்கி வரும் என்ற நியூட்டனின் விதி குறித்து அறிவியலாளர்கள் சிந்திக்கத் தொடங்கினர். விளைவு, சந்திர மண்டலத்துக்கு இராக்கெட்டுகளை ஏவினர். தொலைநோக்குக் கருவிகளை வானில் உள்ள பாறைகள் மீது நிறுத்தி வைத்தனர். “வெற்றி பெறச் சிந்தியுங்கள்நூலின் ஆசிரியர் ஸ்டேபிள் தன்னுடைய நூலில், ”வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கண்டுபிடிக்க ஐந்தாண்டுகள் முயற்சி செய்ததாக கூறுகிறார். அந்த முயற்சியில் ஆக்கப்பூர்வமான மாற்றம் தன்னுடைய சிந்தனையும், நம்பிக்கையும் தான்எனக் கண்டறிந்ததாகக் கூறுகிறார்.