Thursday 12 March 2020

”உன்” அல்ல “நம்”!

மனைவியிடம் பிள்ளைகள் சார்ந்து பேசும் போதெல்லாம்உன் பிள்ளைகள்என்ற வார்த்தையைத் தான் வழமையாக பயன்படுத்துவேன். அது குறித்து எந்த பிரஞ்ஞையும் எனக்கு இருந்ததும் இல்லை. அப்படிச் சொல்லும் சமயங்களில் மனைவி, என் அப்பா, அம்மா ஆகியோர் கூட இது குறித்து ஏதும் சொன்னதாய் நினைவில்லை.

நேற்று மகளின் பிறந்த நாள் நிகழ்வு முடிந்த பின் வராண்டாவில் மகன், மனைவி, மகளோடு அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். இரவு நெடுநேரம் ஆகி விட்டதால் மனைவியிடம், “பெட்ரூமில் போர்வையை விரித்துக் கொடுடி. உன் பிள்ளைகள் தூங்கட்டும்என்றேன்.  

அருகில் படுத்திருந்த மகன் சட்டென, ”டாடி…….உன் பிள்ளைகளுக்குன்னு சொல்லக்கூடாது. நம் பிள்ளைகளுக்குன்னு சொல்லனும்என்றான்.

அப்பொழுதும் கூட எந்த பிரஞ்ஞையும் எனக்குள் எழவில்லை. அவன் சொன்னது குறித்து யோசிக்காமல் அனிச்சையாய் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எனக் கேட்டேன்.