Tuesday 6 March 2018

பிள்ளைப்பேறு அருளும் பர்வதவர்த்தினி

மூன்றாம் திருச்சுற்றை முடித்து இரண்டாம் திருச்சுற்றுக்குள் வந்தால் பத்து கைகளும், துதிக்கையும் கொண்டு மேற்கு நோக்கிய நிலையில் அபூர்வ பிள்ளையார் அமர்ந்திருக்கிறார். இந்த பிள்ளையாருக்கு தெற்கே சக்கர தீர்த்தம் உள்ளது.

310 அடி நீளமும், 59.5 அடி அகலமும், 18.5 அடி உயரமும் கொண்டு விளங்கும் இரண்டாம் திருச்சுற்றின் வட கிழக்கில் சங்கு தீர்த்தம், பிரம்மஹத்தி தீர்த்தம், சூரிய புஷ்கரினி தீர்த்தன், சந்திர தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனா தீர்த்தம், கயா தீர்த்தம் என எட்டு தீர்த்தக் கிணறுகள் உள்ளன. வடமேற்கில்கோடி தீர்த்தம்அமைந்துள்ளது. இராமர் வில் நுனியால் குத்தி ஊற்று உண்டாக்கி நீர் எடுத்து லிங்கத்திற்கு முழுக்கு செய்த இந்த கோடி தீர்த்தத்தோடு இரண்டாம் திருச்சுற்று முடிவடைகிறது.

Saturday 3 March 2018

மாயவனைக் கட்டிப் போட்ட மன்னவன்!

பிரகாரங்களைக் கடந்து உள்ளே நுழைந்ததும் அனுப்பு மண்டபம் எனப்படும் முழுக்க கருங்கல்லினாலான சேதுபதி மண்டபம் வரவேற்கும். அதைக் கடந்து உள்ளே நுழைந்ததும் தெற்கு முகமாக பெரிய அனுமன் தன் வலக்கையை உயர்த்தியபடி காட்சி தருகிறார். அனுமன் கோவிலுக்கு எதிரில் மகாலட்சுமி தீர்த்தம் உள்ளது. தீர்த்தத்தில் நீராடிய பின்பு தான் சன்னிதிக்குள் சென்று வழிபட வேண்டும். இத்தீர்த்தத்தில் நீராடிய பின் அதே வழியாக மகாலட்சுமி சன்னிதிக்கு வரலாம்.

அனுமன் கோவிலுக்கு மேற்கு பக்கத்தில்சேதுபதீசம்” (சேதுபதி ஈஸ்வரம்) உள்ளது. சேதுபதி மன்னர்களில் ஒருவரான விஜயரகுநாத சேதுபதி நாள்தோறும் குதிரையில் வந்து இராமநாதரை வழிபட்ட பின்னரே இரவு உணவை உண்பது வழக்கம். ஒருமுறை அவர் வருவதற்குள் அர்த்தசாமபூஜை முடிந்து விட்டது. அதனால் இனியும் தரிசனம் தடைபடக்கூடாது என்பதற்காக இந்த சேதுபதீசத்தை உருவாக்கினார். இங்கு எழுந்தருளியிருக்கும் இராமநாதர், விசுவநாதர் இருவரும்சேதுபதியம்மன்என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்த வரலாற்றை நினைவு கூறும் வகையில் விஜயரகுநாத சேதுபதி குதிரை மீது சவாரி செய்யும் பாவணையில் அமைந்த உலோகச் சிற்பம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. சேதுபதீசத்தின் தெற்கே உள்ள சிறிய நடைமண்டபம் வழியாகவும் மகாலட்சுமி தீர்த்தத்தையும், மகாலட்சுமி சன்னிதியையும் அடையலாம்.