Wednesday 18 April 2018

புயல் தொடாத புண்ணிய தலம்!

உயர்ந்த மதில் சுவர்களைக் கொண்டு கிழமேல் 865 அடி நீளமும், தென் வடல் 657 அடி அகலமும் கொண்ட இராமேஸ்வரம் கோயில் ஆரம்பகாலத்தில் ஆலயமாக கட்டப்படவில்லை. 16  ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இவ்வாலயத்தை ஆரம்ப காலத்தில் தீர்த்தப் பெருமைகளுக்கு உரியதாக மட்டுமே மக்கள் போற்றி வந்துள்ளனர்.  
 
ஆலயமாக உருமாற்றும் போது தீர்த்தமாடலுக்கு அது தடையாகலாம் என்று கருதி  மன்னர்களும், அரசர்களும் கோயில் எழுப்பவில்லை. பின்னர் ஆட்சி உரிமைக்கு வந்த சேதுபதிகள் தீர்த்தங்களை மறைக்காமலும், தீர்த்தமாடல்களுக்கு சிக்கல் வராத வகையிலும் ஆலயத்தை வடிவமைத்து கோபுரங்களைக் கட்டினர்.

Saturday 14 April 2018

ஆலயம் தொழுதலை விடவும் சுகமான அதிகாலை

சில தினங்களாகவே தன்னுடைய ஸ்நாக்ஸ் காசை சேகரித்து வருவதாக மகன் சொல்லிக் கொண்டிருந்தான்.

ஏன்? என்றேன்.

தமிழ் புத்தாண்டு வரை காத்திருங்கள் என்றான்.

இன்று காலையில் என்னோடு மகளையும், மனைவியையும்  ஓரிடத்தில் நிற்க வைத்தான். அழகாக பேக் செய்யப்பட்ட கிஃப்டைக் கொடுத்தான்.

பிரித்து பார்த்த போது மூன்று ரோஜாக்களை ஒரு பொம்மை தன் தலையில் தாங்கிய படி இருந்தது.

Friday 13 April 2018

மத்தளம் கொட்ட மரகதம் உதிரும் என்றால் என்ன?

திருக்கயிலாய மலையில் சிவபெருமான் தன் துணைவி பார்வதி தேவியிடம் தான் ஏற்கனவே கற்றுக் கொடுத்திருந்த வேதமந்திரத்தை திருப்பிச் சொல்லும் படி கேட்க அதை அவர் மறந்து விட்டார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் பூலோகத்திற்குச் சென்று வேதியர் ஒருவரின் மகளாக பிறந்து வேதங்களை பலமுறை பயின்று வர பார்வதி தேவிக்கு சாபமிட்டார்.

சாபம் பெற்ற பார்வதி தேவியை இராஜமாணிக்க சதுர்வேதபுரம் என்ற ஊரில் முறைப்படி வேதம் பயின்ற, குழந்தை வரம் வேண்டி நீண்டகாலம் தன்னை நினைத்து தவமிருந்து வரும் வேதியர் ஒருவருக்கு மகளாக பிறக்கச் செய்தார். பூண் முலையாள் என்ற பெயரோடு வேதமந்திரங்களை கற்று வளர்ந்து வந்த பார்வதி தேவி பருவ வயதை அடைந்ததும் சிவபெருமான் வேதியர் உருவில் வந்து பார்வதி தேவியை மணந்தார்.

Wednesday 11 April 2018

ஜகன்னாதரை வழிபட்டால் ஜகத்தை ஜெயிக்கலாம்!

புதிதாக வீடு கட்டும் போது கட்டிட சாமான்களை போட்டு வைப்பதற்காக தற்காலிக குடிசை ஒன்றை வீடு கட்டும் இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் அமைப்பது நம்முடைய வழக்கம். அப்படி அமைக்கும் போது அந்த இடத்திற்குரியவரிடம் அதற்கான அனுமதியை கேட்போமில்லையா? அதுபோல சீதையை மீட்க கடலின் மேல் பாலம் கட்ட முடிவு செய்த இராமர் கடலரசனிடம் கடல் அலைகளின் சீற்றத்தை குறைத்துக் கொள்ள வேண்டியும், அனுமதி கேட்டும் காத்திருந்தார். அவனுக்கென்ன வேலையோ? மூன்று நாட்களாக இராமரின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமலிருந்தான். இராமரோ அங்கிருந்த தர்ப்பையை ஆசனமாக கொண்டு சயனித்தபடியே காத்திருந்தார். அப்படி இராமர் சயனித்திருந்த தலம்திருப்புல்லணைஎன அழைக்கப்பட்டது. நாளடைவில் அது மருவிதிருப்புல்லாணிஎன்று பேச்சு வழக்கானது. வடமொழியில் இவ்வூர்தர்ப்பசயனம்என்றழைக்கப்படுகிறது. தர்ப்பம்புல்; சயனம்உறங்குதல். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரத்திலிருந்து கீழக்கரை செல்லும் வழியில் பத்து கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்தலத்தில் வீற்றிருப்பவர் ஆதி ஜெகன்னாத பெருமாள். பஞ்சதரிசன தலமான பூரியில் இடுப்பு உயர அளவில் மட்டுமே வீற்றிருந்து காட்சி தரும் ஜெகன்னாதர் இங்கு முழுமையாக காட்சி தருவதால் இத்தலம்தட்சிண ஜெகன்னாதம்என்று அழைக்கப்படுகிறது.

Friday 6 April 2018

இராமர் வகுத்துக் கொடுத்த வழிபடு மரபு !

விபிஷணன் பிரதிஷ்டை செய்த லிங்கத்தை அடுத்துகாசிவிசுவநாதர் லிங்கம்உள்ள காசி விசுவநாதர் சன்னிதி உள்ளது. இராவணவதம் முடிந்ததும் சீதையோடு வானர வீரர்கள் சூழ கந்தமாதன மலைக்கு (இன்றைய கந்தமாதன பர்வதம்) வந்த இராமரை அகத்தியர் முதலான ரிஷிகளும், தேவர்களும் சந்தித்து வணங்கி வழிபட்டதோடு பிரம்மஹத்தி தோசம் நீங்க சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட ஆலோசனை கூறினர். அவர்கள் கூறிய படி பூஜித்து வழிபட சிவலிங்கம் ஒன்றை கொண்டு வரச் சொல்லி தன் பரம பக்தனான, போர்க்களத்தில் புகுந்து விளையாடிய அனுமனை இராமர் அனுப்பி வைத்தார்

காலபைரவரோடு எற்பட்ட பஞ்சாயத்தால் அவர் வர தாமதமானது. பூஜைக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் சீதை மணலை தன் கைகளால் குவித்து லிங்கம் போல் செய்து தர அதையே பிரதிஷ்டை செய்த இராமர் வழிபாட்டை ஆரம்பித்தார். தாமதமாக வந்த அனுமன் தான் கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்யச் சொன்னதோடு சீதை உருவாக்கிய லிங்கத்தை தன் வாலால் பிடுங்கி எறிய முயன்றார். தன் பலம் கொண்ட மட்டும் முயன்ற