Monday 31 December 2018

கெத்து!

ஓவியங்கள் வரைவதில் மகனுக்கு ஈர்ப்பு இருந்தது. உள்ளூரில் நடத்தப்படும் போட்டிகளில் பங்கு கொண்டு வந்தான். அந்த ஈர்ப்பை ஈடுபாட்டுடன் கூடியதாய் மாற்ற சில முயற்சிகளை அவ்வப்போது செய்து வந்தேன். அதன் தொடர்ச்சியாக பத்திரிக்கைகளுக்கு அனுப்பலாம் எனச் சொன்னபோது பிரசுரமாகுமா? என எதிர் கேள்வியை சந்தேகமாய் கேட்டான்.

அனுப்புவோம். பிரசுரமாவதைப் பற்றி இப்போது யோசிக்க வேண்டாம்? எனச் சொன்னேன்.

நான்கு படங்கள், நான்கு பத்திரிக்கைகள் என முடிவு செய்தோம். நான்கு படங்களை வரைந்து தந்தான்.

அனுப்பி வைத்து விட்டு வாரம் தவறாது பிரசுரமாகி இருக்கிறதா? எனத் தேடத் தொடங்கினேன். அதுவே ஒரு பிரசவ வலியாய் இருந்தது. அவனோ, அது பற்றியெல்லாம் கவலை கொள்ளவில்லை. நேரம் கிடைக்கும் போது ஓரிரண்டு படங்களைத் தொடர்ந்து வரைந்து தந்து கொண்டிருந்தான்

Sunday 30 December 2018

பரம் பொருளை நெருங்க பற்றற்றிரு !

வழிபாட்டின் உன்னதங்களை உணராமல் வெறுமனே ஆலய வழிபாட்டில் கலந்து கொள்வதிலும், வழிபாட்டின் வழிமுறைகளை இம்மி பிசகாமல் பின்பற்றுவதிலும் ஒரு பயனும் இல்லை. இவைகளை உணர்ந்தால் மட்டுமே உயர்பேற்றை அடைய முடியும் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். இதை எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதாலயே அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, நைவேத்தியம், ஆராதனை என்ற ஐந்து வகை உபச்சாரங்களுடன் ஆலயங்களில் இறைவனுக்கு ஆறுகால பூஜை நடத்தப்படுகிறது.

Saturday 29 December 2018

அர்ச்சனை எனும் அர்ப்பணிப்பு !

வழிபாட்டின் ஒரு அங்கம் அர்ச்சனைஅர்ச்சனை என்பதற்குஅர்ப்பணித்தல்என்று பொருள். இறைவனுக்கு எல்லாவற்றையும் அர்ச்சனை மூலம் அர்ப்பணித்து விடுகின்றோம். அதனால் தான் அர்ச்சனைக்காக கொண்டு வந்த எந்தப் பொருளையும் கொண்டு வந்த படியே திருப்பி எடுத்துச் செல்வதில்லை

எந்த ஆலய வழிபாட்டிற்குச் சென்றாலும் வாங்கிச் செல்லக்கூடிய அர்ச்சனைப் பொருட்களில் அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூக்களைத் தவிர தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, பத்தி, சூடம், விபூதி, குங்குமம் ஆகியவைகள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இவைகள் மட்டும் அப்படி என்ன உசத்தி? இப்படி கேள்வி கேட்பீர்களேயானால் அது தவறில்லை. அறிந்து கொள்ளும் நோக்கில் கேட்கப்படும் இது போன்ற கேள்விகளே ஆரோக்கியமான ஆன்மிக வளர்ச்சி பெறுவதற்கு உரிய சரியான அணுகுமுறை. இறைவன் இருக்கின்றான் என்றால் அவனை எனக்குக் காட்ட முடியுமா? என்ற கேள்வி நரேந்திரனை விவேகானந்தராக்கியது. அறிவின் எழுச்சியில் பிறக்கும் இது போன்ற கேள்விகளுக்கான பதில்களில் ஆன்மிகத்தின் அற்புதங்கள் புதைந்து கிடக்கின்றன

Friday 28 December 2018

கூடாதவை தவிர்ப்போம் !

துளசிதேவி விநாயகரை மணம் புரிய விரும்பி வெகுகாலம் தவமிருந்தாள். விநாயகரோ, நீ திருமாலுக்கு மனைவியாக வேண்டியவள். மதி கெட்டு என்னை மணம் புரிய விரும்பாதே என எவ்வளவோ எடுத்துச் சொன்னார். ஆனால் துளசிதேவி விநாயகரை மணம் செய்து கொள்வதில் பிடிவாதமாய் இருந்தாள். அவளின் பிடிவாதம் கண்டு வெகுண்டெழுந்தவர், ”நீ செடி வடிவம் பெறுவாயாக என்றும், என்னுடைய தினசரி வழிபாட்டிற்கும், பூஜைக்கும் நீ அருகதையற்றவளாவாய் என்றும் சாபமிட்டார்”.

துளசிதேவியைப் போல சிவனின் வழிபாட்டிற்குத் தாழம்பூ உகந்ததல்ல. இதை சிவபெருமானே சொல்லி இருக்கிறார். தன்னுடைய முடியையும், அடியையும் காணும் போட்டியில் பிரம்மனோடு சேர்ந்து பிராடுத் தனம் செய்ததால் தாழம்பூவுக்கு இந்தத் தண்டனை கிடைத்தது. இப்படி இறைவன் தனக்கு உகந்தவை அல்ல என விலக்கியதை நாம் அத்தெய்வங்களின் வழிபாட்டிற்கு வாங்கிச் செல்லக்கூடாது.

Thursday 27 December 2018

மொழிபெயர்ப்பு தந்த "கடுப்பு" ....

டாடி.....என்ஃப்ரண்ட எக்ஸாம் ஹால்ல பரீட்சை எழுத விடாம அபி டார்ச்சர் பண்ணி எடுத்துட்டானாம் என்றாள் மகள்.

மகனை அழைத்து ஏன் என்றேன்.

நான் ஒன்னும் செய்யல டாடி. அந்த அக்கா தான் தலையில கொட்டுனாங்க என்றான்.

சும்மா யாராவது கொட்டுவாங்களா? நீ ஏதவது செஞ்சிருப்ப என்றேன்.

அருகில் இருந்த மகள், "இவன் டிரான்ஸ்லேட் பண்ணிக் கொடுத்ததைக் கேட்டு கடுப்பாகித் தான் கொட்டியிருக்கு" என்றாள்.

எட்டாவது படிக்கிற அந்த அக்கா ஆறாவது படிக்கிற உனக்கி்ட்ட என்னத்த டிரான்ஸ்லேட் பண்ணச் சொன்னுச்சு.

ஒரு ப்ராவெர்பை (proverb) கொடுத்திருந்தாங்க. அதை அப்படியே ஆங்கிலத்துல டிரான்ஸ்லேட் பண்ணனும்னு இருந்துச்சு. உனக்கு ஆன்ஸர் தெரியுமா்ன்னு அந்த அக்கா கேட்டாங்க. அதுனால நான் சொன்னேன். கேட்டுட்டு தலையிலயே கொட்டிட்டாங்க.