Wednesday 30 April 2014

மெளன அழுகை

அதீதப் புனைவு, மிகையதார்த்தப் புனைவு,  ஜால யதார்த்தப் புனைவு போன்ற யுத்திகளில் சிக்கித் திணறாமல் தான் அறிந்த வாழ்வை எதிர்கொண்ட யதார்த்தத்திலிருந்து கவிதையாகச் செதுக்கிச் செல்கிறார் கவிஞர் மு.கோபி சரபோஜி. சமூகத்தைச் சதா கண்காணிப்பது, குடும்பச் சிக்கல்களை எடுக்க முனைவது, பெண்மையைக் கொண்டாடுவது, தத்துவ கவித்துவச் சரடினூடே கொஞ்சம் பிரச்சாரம் செய்வது, கொஞ்சம் வசந்தம் பூசுவது, வாழ்வை ரசிக்கச் சொல்வது என எல்லாமுமாகியிருக்கும் கோபி சரபோஜி  இலக்கிய வெளியில் தன் பயணத்தை வெற்றிகரமாய் துவங்குவதற்கான சாட்சியங்களோடு இருக்கிறார்.

அமிர்தம் சூர்யா

    தலைமை துணை ஆசிரியர் -கல்கி வார இதழ்


Saturday 12 April 2014

காத்திருக்கும் வேட்பாளர்கள்!

ஒரு வழியாக மகனை டான்ஸ் போட்டியில் சேர்த்துக் கொண்டதும் அந்த வயதிற்கே உரிய சந்தோசத்தோடு மகிழ்ந்திருந்தவனுக்கு பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியில் பரிசு ஒன்று கிடைத்திருக்கிறது என்ற இன்னொரு சந்தோச செய்தி சொல்லப்பட்டது. இந்த வருடம் இரண்டு பரிசு பெற காத்திருந்தவனுக்கு வம்பிழுக்க ஒரு ஆள் தேவைப்பட எல்லோரும் எப்போழுதும் கொண்டாடித் திரியும் தன் அக்காவை அதற்காக தேர்ந்தெடுத்தான்.

இந்த வருடம் அவளுக்கு ஒரு பரிசு மட்டுமே இருந்தது. தான் இரண்டு பரிசு வாங்கியிருப்பதை பெருமையாய் தன் அண்ணனின் பக்கபலத்தோடு சொல்லிக்கொண்டும் கூடவே நீ ஒன்னு தானே வாங்கி இருக்கே என கேலி செய்து கொண்டும் இருக்க, இரண்டொரு நாட்களாகவே பணி முடிந்து திரும்பியதும் அவர்களைச் சமாதானம் செய்வதே எனக்கு வேலையாக இருந்தது.

நேற்று பேசும் போது டாடி……நானும் இரண்டு பரிசு வாங்க வாய்ப்பு வந்து இருக்கு என்று மகள் சொன்னாள். பெஸ்டா ஸ்டேஜ்ல டான்ஸ் பண்ணுறவங்களுக்கு கரஸ்பாண்ட் சார் சிறப்புப்பரிசு தருவதாக சொல்லி இருக்காங்களாம். எங்க மிஸ் சொன்னாங்க. அதை வாங்கிட்டா எனக்கும் இரண்டு பரிசாகிடும்அதுனால வீட்டுல தினமும் ரிகர்சல் பண்ணிப்பார்க்க போறேன்னு சொன்னாள்அருகிலிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த மகன் நானும் நல்லா ரிகர்சல் பண்ணி அந்த பரிசை நான் வாங்கிட்டா எனக்கு மூன்றாகிடும்ல என்றான்.

இரண்டா? மூன்றா? பார்ப்போம். ஆண்டுவிழா அன்னைக்கு தெரிஞ்சிடும்ல என மகளும், மகனும் காத்திருக்கிறார்கள் தேர்தல் வெற்றிக்கு காத்திருக்கும் வேட்பாளர்கள் போல!