Monday 4 May 2015

ரசிக்க – சிந்திக்க - 14

 

ஒரு நாள் குறுகலான ஒரு ஒற்றையடிப் பாதை வழியாக நாடக மேதை பெர்னாட்ஷா நடந்து வந்து கொண்டிருந்தார். அதே பாதையின் மறுமுனையிலிருந்து ஒரு முரடன் வந்து கொண்டிருந்தான். எதிரில் வருவது ஷா என்பதை அறிந்து அவன் வேண்டுமென்றே பாதையை மறித்துக் கொண்டு வழிவிடாமல் நின்றான். வழி விடுமாறு ஷா அடக்கமான குரலில் கேட்டார். அதற்கு அவன், “முட்டாள்களுக்கு வழிவிடுவது என் வழக்கமில்லைஎன்று கூறி வழியை மறைத்தபடியே நின்றான்.

உடனே ஷா, “முட்டாள்களுக்கு வழிவிட்டு விலகி நிற்பது என் பழக்கம்என்று கூறியபடி பாதை ஓரத்தில் விலகி நின்றார். மூக்குடைபட்ட முரடன் ஷாவை முறைத்தபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றான்.