Tuesday 5 December 2017

காலபைரவரின் அனுமதி இருக்கா?


நவக்கிரக வழிபாட்டை முடித்த பின் நேராக இராமேஸ்வரம் போய் இறங்கி விடக் கூடாது. இராமேஸ்வரத்திற்குள் நுழையும் முன் காவல் தெய்வமாக பாம்பனில் இருக்கும் பைரவரிடம் அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெறா விட்டாலும் நிகழும் என்ன நிகழும்
  
இராவண வதம் முடிந்ததும் பிரம்மஹத்தி தோசம் நீங்க சிவபூஜை செய்ய இராம நினைத்தார். அதற்காக ஒரு சிவலிங்கத்தை கொண்டு வரச் சொல்லி அனுமனை அனுப்பி வைத்தார். லிங்கத்தை தேடி வானில் பறந்தவர் காசி எல்லைக்குள் நுழைந்தார். சிவபூஜைக்கு வேண்டிய சுயம்பு லிங்கத்தை தேடி வந்தவருக்கு காசி முழுக்க லிங்கங்களாய் இருப்பது தெரிந்தது. இதில் எது சுயம்பு லிங்கம் என அவரால் அடையாளம் காண முடியவில்லை. களவாடியோ, கவர்ந்தோ போக வந்த அனுமனுக்கும் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. கருடன் ஒரு லிங்கத்தை மட்டும் தன் பங்குக்கு வட்டமிட்டுக் காட்ட பல்லியோ அந்த லிங்கத்தின் மீது அமர்ந்து வாலாட்டிக் காட்ட சுயம்பு லிங்கத்தை அடையாளம் கண்டு கொண்ட அனுமன் ஆனந்தமடைந்தார். தன் பலம் பொருந்திய கரங்களால் அந்த லிங்கத்தை தூக்க முயன்றார்

Monday 20 November 2017

நன்மைகள் நல்கிடும்(ராம) நவக்கிரகங்கள்!

அசுரர்களின் அரசனான ரம்பா என்ற அசுரன் ஒருநாள் நதிக்கரையோரம் வந்து கொண்டிருந்தான். அந்நதியில் ஒரு பெண் எருமைமாடு குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். முற்பிறவியில் அழகிய இராஜகுமாரியாக இருந்து சாபத்தால் எருமையாக மாறியிருந்த அந்த பெண் எருமையின் மேல் மையல் கொண்டு தன்னை ஒரு ஆண் எருமையாக மாற்றிக்கொண்ட ரம்பா அதனுடன் கூடி மகிழ்ந்தான். உருவில் எருமை மாடுகளாக இருந்த அவ்விருவருக்கும் பிறந்தவன் மகிஷாசுரன். மற்றவர்களை துன்புறுத்திப் பார்ப்பதிலேயே சுகம் காணும் அசுரகுலத்தில் பிறந்திருந்த போதும் அவனுக்குள்ளும் நல்ல குணங்கள் இருந்தது. படைப்புக் கடவுளான பிரம்மாவை நோக்கி கடும் தவமிருந்து மனிதனாலும், மிருகத்தினாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றான். வரம் பெற்றவுடன் அவனுக்குள் இருந்த பிறவி அசுரகுணம் வெளியே வர ஆரம்பித்தது.

Tuesday 31 October 2017

வெற்றிக்கு அச்சாரமிட்ட வெயிலுகந்த விநாயகர்

பல வீடுகளில் மாமியாருக்கும், மருமகளுக்கும் ஒத்துப் போகாது. இருவருக்குமான உரசலில் அம்மா பக்கமா? மனைவி பக்கமா? என முடிவெடுக்கத் தெரியாமல் ஆண் விழி பிதுங்கிப் போவான். சில வீடுகளில் இந்த நிலை அப்படியே தழைகீழாக இருக்கும். மாமனாருக்கும், மருமகனுக்கும் ஒத்துப் போகாது. அப்பாவா? கணவனா? என முடிவெடுக்க முடியாமல் பெண் பரிதவித்துப் போவாள். மனித குலத்துக்கு மட்டுமே வாய்த்த இப்படியான சிக்கல்களில் சில சமயம் இறைவனும் சிக்கிக் கொள்வதுண்டு

Sunday 22 October 2017

புனித யாத்திரை புறப்படுவோம்!

மனிதனைப் புதுப்பிக்கக் கூடிய மிகப் பெரிய சக்தி பயணங்களுக்கு உண்டு. அந்தப் பயணத்தை பக்தி சிரத்தையாக புண்ணிய தலங்களை நோக்கி ஒருவன் மேற்கொள்ளும் போது அதுயாத்திரையாகிறது.  
 
ஒவ்வொரு மதமும் தன் மதத்தவர்கள் சென்று வருவதற்கென புனித இடங்களைக் கொண்டுள்ளன. அங்கு  தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் சென்று வர வேண்டும் என ஒவ்வொருவரும் நினைத்தாலும் அக்காலங்களில் அது அத்தனை சாத்தியமாய் இருக்கவில்லை. இன்றோ அத்தகைய நிலைமை இல்லை. அக்காலங்களில் செய்ய வேண்டிய பிரயாத்தனங்கள் இப்போது தேவையில்லை. நவீன வசதிகள் பயணங்களைப் போல யாத்திரைகளையும் எளிமையாக்கி விட்டன. வாகன வசதிகளால் வழித்தடங்களும், பயண நேரங்களும் சுருங்கின. இதனால் எல்லோராலும் நினைத்த நேரத்தில் யாத்திரைகளை மேற்கொள்ள முடிகிறது