Saturday 30 November 2013

அதிசயமே அதிசயமே

சுட்டி விகடன் 15 ம் ஆண்டு சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரை


Tuesday 26 November 2013

சூல் பிடிக்கும் சர்ப்பம்

அடங்கி இருப்பதால்
ஒடுக்கி விட்டதாய் நினைக்கிறாய்
அற்பந்தானே என அசைவுகள் தோறும்
சர்ப்பமாய் தீண்டி திரிகிறாய்.
சர்ப்பத்தின் நச்சு சுருங்கி
தீண்டலின் தீவிரம் தனிகையில்
அற்பமாய் வீழ்ந்த நான்
சர்ப்பமாய் சூல் பிடிக்க கூடும்.
அந்த அந்திப்பொழுதில்
என்னுடனான சயனத்தை தாட்சண்யமின்றி
எட்டா தூரத்தில் வைக்க இன்றே பழகி கொள்

Friday 22 November 2013

மக்கள் மனசு - 2


தமிழகத்திலேயே சரியாக கால் பதிக்க முடியாத தேமுதிக டெல்லி சட்டசபை தேர்தலில்போட்டியிடுவது குறித்து.......

தேமுதிக-வின் ஆசை யானை தன் தலையில் மண் அள்ளிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பான செயல்.


நன்றி : பாக்யா வார இதழ்

Thursday 21 November 2013

மெளனப் பரிமாற்றம்

வர்ணங்களைப் பார்க்கும்பொழுதெல்லாம்
அகம் புரளும் உன் உணர்வுகளை
நீ பகிர்ந்து கொண்ட
சந்தோச தினமொன்றில்
ஏழு வர்ண உள்ளாடைகளை
பரிசு பொதியாக்கி
உன் கைக்குள் திணித்தேன்.

நனைந்த பின் அவிழ்த்தெறியும் ஆடை
ஏழு வர்ணத்தில் எதற்கென?
செல்லச் சிணுங்கலோடு வாங்கிக் கொண்டாய்

பின்னொரு நாளில்
நீயும்,நானும் வார்த்தைகளற்றவர்களான போது மீளவும்
உன்னைப் பரிமாற தொடங்கியிருந்தாய் எனக்கு
அசைந்தவாறே காற்றில் வர்ணமற்று
உலர்ந்து கொண்டிருக்கும்
உனது உள்ளாடை வாயிலாக.


Friday 15 November 2013

ரெளத்ரம் பழகு

வேலை உத்திரவாத முத்திரை பெற
ரெளத்திரம் பழகு என்றார் 

பக்கத்து சீட்டு பத்து வருட சீனியர்

வேலை பழகலாம்……
அது என்ன ரெளத்திரம்? என்றேன்

"சுவாசமுள்ள கோமாவில் இரு" என்றார்
சுருக்கமாக

அவர் ரெளத்திரமாக பழகி இருந்தது
எனக்கு தரித்திரமாக தெரிந்தது

பட்டென விட்டொழித்தேன்
சேர்ந்த வேலையோடு
காக்கா பிடிக்க பழக்கப்படுவதையும்.

Wednesday 6 November 2013

துளிப்பாக்கள்

ஆயிரம் ஏக்கர் மடத்தில்
பகட்டாய் தொடங்கியது
பற்றற்று இருவகுப்பு.

-------------------------------------------
வாங்கியவனும்
கொடுத்தவனும் காத்திருக்கிறார்கள்
சம்பள தேதி.
-----------------------------------------

நன்றி : காற்றுவெளி 

Tuesday 5 November 2013

துளிப்பாக்கள்

காளைகளுமில்லை
கழனிப்பானையுமில்லை
கதிர் அறுக்கும் கருவி.
--------------------------------------------
வார்த்தையற்ற மொழியில்
தோற்றுப்போனது வயது.
தாத்தாவும்,பேரனும்!
-------------------------------------
சலனப்படுத்தாமல்
கடந்து போங்கள்
படுக்கையறை.
-------------------------------------
எழுவதற்காக விழு
நித்தமும் தன்னம்பிக்கை.
சூரியன்
----------------------------------

நன்றி : சஞ்சிகை

Friday 1 November 2013

துளிப்பாக்கள்

அவதார நம்பிக்கைகளில்
ஆணியடிக்கப்பட்ட மக்கள்
ஆசிரமத்தில் சாமி!
-------------------------------------------
கவலையில் கிடந்தான்
ஆபரணங்களில் மொய் வாங்கியவன்
பணமதிப்பு வீழ்ச்சி
-------------------------------------------
கொதித்தெழுந்தான் கடவுள்
சரிந்து விழுந்தன கலசங்கள்
குவியும் கோரிக்கைகள்
--------------------------------------------

நன்றி : முத்துக்கமலம்