Tuesday, 24 February 2015

ரசிக்க – சிந்திக்க – 5

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனான ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக இருந்த சமயத்தில் அவரைச் சந்திப்பதற்காக அவருடைய நண்பர் ஒருவர் வந்தார். அப்போது லிங்கன் தன்னுடைய காலணிகளுக்கு பாலீஷ் போட்டுக்கொண்டிருந்தார். இதைக் கண்ட அந்த நண்பர் லிங்கனை செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் என சுட்டிக்காட்டி மட்டம் தட்டும் நோக்கத்துடன், ”மிஸ்டர் லிங்கன், “உங்கள் காலணிகளுக்கு நீங்களே பாலீஷ் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டார்.

Monday, 23 February 2015

சிங்கப்பூர் - 50


சிங்கப்பூரின் பழைய பெயர் ”டெமாசெக்”.  13 ம் நூற்றாண்டில் (1390 ம் ஆண்டு) ஸ்கந்தர் ஷா என்னும் பாலம்பாங்க் மன்னன் தான் தோற்றுவித்த சிறு காலனிப் பகுதியான சிங்கப்பூருக்கு இப்பெயரை இட்டான்.

சிலப்பதிகாரத்தில் கோவலனின் முற்பிறவி ஊராகக் குறிக்கப்பட்டுள்ள ”சிங்கபுரம்” என்ற பெயரால் ”சிங்கப்பூர்” என்று அழைக்கப்பட்டதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக 14 ம் நூற்றாண்டிற்கு முன்னர் இப்பகுதிகள் சோழ மண்டலத்தின் ஆளுகையில் இருந்ததைக் குறிப்பிடுகின்றனர்.

Tuesday, 17 February 2015

புகைப்படம் - 12

இராமநாதபுரம் புத்தகக் கண்காட்சியில் நண்பரின் மகள் என் நூல்களுடன்

Monday, 16 February 2015

புகைப்படம் - 11

கவிமாலை “கவி அரங்கில்”

ரசிக்க – சிந்திக்க - 4


அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஒரு பிரச்சனை. அங்கிருந்த வரலாற்றுத் துறைக் கட்டிடம் அமைந்திருந்த புல் தரையின் மீது  அங்கு படிக்கும் மாணவர்கள்  கேண்டீனுக்குச் செல்லும் போதெல்லாம் கண்டபடி நடந்து சென்றார்கள். அதனால் புற்கள் அழிந்து திட்டுத் திட்டாகி புல்தரையே அலங்கோலமாக மாறிக் கொண்டிருந்தது. 

புல்தரை மீது நடக்காமல் கேண்டீனுக்குச் செல்ல வேண்டுமானால் அரை கிலோமீட்டர் தூரம் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதால் புல்லின் மீது நடந்து செல்லக் கூடாது என பேராசிரியர்கள் கூறியதை மாணவர்கள் கேட்கவில்லை. தாங்கள் எவ்வளவு சொல்லியும் மாணவர்கள் கேட்காததால் பேராசிரியர்கள் தங்களின் தலைமைப் பேராசிரியரிடம் புகார் செய்தார்கள். புகாரைக் கேட்ட அந்தத் தலைமைப் பேராசிரியர் அப்படியானால் “வரலாற்றுத்துறைக் கட்டிடத்தில் இருந்து கேண்டீனுக்குச் செல்ல புல்தரையின் மீது ஒரு சிமெண்ட் பாதையை நாமே அமைத்து விடுவோம். மாணவர்கள் கண்ட படி நடந்து செல்லாமல் அதன் மீது மட்டும் நடந்து கேண்டீனுக்குப் போய் வரட்டும்” என்றார். அந்தத் தலைமைப் பேராசிரியர் சொன்ன ஐடியாவில் உருவானது தான் இன்று பெரிய புல் தரைகளின் மீது உள்ள புற்களை மிதிக்காமல் நாம் நடந்து செல்வதற்காக போடப்பட்டிருக்கும் சிமெண்ட் பாதைகள்! இந்த ஐடியாவைச் சொன்ன தலைமைப் பேராசிரியர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஐசன் ஹோவர்.

Wednesday, 11 February 2015

வடிவம் மாறியிருந்த ஊரில்....

நன்றி : தமிழ்முரசு நாளிதழ்
        கணையாழி.

புகைப்படம் - 10

இராமநாதபுரம் புத்தகக் கண்காட்சியில் என் நூலுடன் நண்பர் தேவா

புகைப்படம் - 9

புத்தக வெளியீட்டு அரங்கில் நண்பர்கள் கண்ணன், கீழை கதிர்வேல் மற்றும் தோழி சுமதிஸ்ரீ

Tuesday, 10 February 2015

புகைப்படம் - 8

தோழி சுமதிஸ்ரீ - க்கு நூல்கள் தந்த தருணம். அருகில் நண்பன் ஆனந்தக்குமார்

காலப் பெருவெளி

சிங்கப்பூரில் இயங்கும் தங்கமீன் பதிப்பகம் வெளியிட்ட முப்பது கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய காலப் பெருவெளி தொகுப்பில் இடம் பெற்றுள்ள என் இரண்டு கவிதைகள்


புழுதி பறக்கப் புழங்கிய வீதிகளில்
கான்கிரீட் கலவைகள்
வண்ணப் பெயர் பலகைகளுடன்
திருத்தமாய் தெருக்கள்
கால்நடையாய் போனவர்களின்
கைகளில் இருசக்கர வாகனங்கள்
ஓடுகளாகவும், மாடிகளாகவும்
உருமாறியிருந்த கூரைகள்
தொலைக்காட்சி அலைவரிசைகளில்
தொலைந்து போன முற்றங்கள்
தும்பிகள் பிடிப்பதையும் காளாண் பறிப்பதையும்
மறந்துவிட்ட குழந்தைகள் - என
அயலகம் சென்றிருந்த வருடங்களில்
வடிவம் மாறியிருந்த ஊரில்
மாறாமலே இருந்தது
கோடாரித் தைலமும்
பச்சைக் கலர் இடைவாரும் இருந்தா கொடேன்
என்ற கோரிக்கைகள் மட்டும்!

தூரத்து வானமாய்
எட்டாமலே போனது
நமக்குள் ஊடேறி கவிழ்ந்திருந்த நினைவுகள்.
கரைசேர வந்த அலையை
அள்ளிச்செல்லும் கடலாய்
நினைவுகளை வாரிக் கொண்டு திரும்பினோம்.
எடுத்துச் செல்லும் வரை தெரியவில்லை
நான் உனக்கானதையும்
நீ எனக்கானதையும் எடுத்துப் போகிறோமென்று.
திருப்பங்கள் நிறைந்த வாழ்க்கையில்
விதையாய் விழுந்திருந்த நினைவுகள்
உச்சரிப்பின் உவப்பில் துளிர்த்துக் கொண்டேயிருக்கிறது
என் பெயர் தாங்கிய உன் மகனாய்
உன் பெயர் தாங்கிய என் மகளாய்
அவரவர் வீட்டில்!நன்றி : தங்கமீன் வாசகர் வட்டம் - சிங்கப்பூர்.

ரசிக்க – சிந்திக்க – 3

தன்னிடம் கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்த சிறுவனிடம் இன்று பயிற்சியாட்டத்தில் நன்றாக விளையாடினாயா? எத்தனை ஓட்டங்கள் எடுத்தாய்? என்று கேட்டார் பயிற்சியாளர். அந்த சிறுவனோ தன் நண்பர்கள் விளையாடிய கிரிக்கெட் மேட்சை பார்க்கச் சென்றிருந்ததால் பயிற்சியாட்டத்திற்கு செல்லவில்லை என்றான். 

கோபம் கொண்ட பயிற்சியாளர் பளீர் என சிறுவனின் கண்ணத்தில் ஒரு அறைவிட்டார். பின்னர் அந்தச் சிறுவனிடம் “யாரோ விளையாடுகின்ற மேட்சை பார்த்து கைதட்டப் போய் இருக்கிறாயே…….. உனக்கு அசிங்கமாக இல்லை. உன்னைப் பார்த்து மற்றவர்கள் கை தட்டி பாராட்ட வேண்டாமா? நீ மற்றவர்களுக்காக கை தட்டப் போகிறாயா? அல்லது மற்றவர்களிடமிருந்து நீ கை தட்டு வாங்கப்போகிறாயா? முடிவு செய்து கொள்” என்றார். அந்த வார்த்தை அந்த சிறுவனின் வாழ்வை மாற்றிப் போட்டது.  அதன்பின் நாள் தவறாமல் பயிற்சி செய்து வந்த அந்த சிறுவன் பின்னாளில் உலகமே வியக்குமளவுக்கு புகழ் பெற்றான். அந்த சிறுவன் தான் சச்சின் டெண்டுல்கர்!

Monday, 2 February 2015

ரசிக்க – சிந்திக்க - 2


இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காந்தியடிகளைக் கைது செய்து சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றார்கள். சிறை அதிகாரியாக இருந்த ஸ்மட்ஸ் என்ற ஆங்கிலேயனுக்கு காந்தியடிகள் மீது கடுமையான வெறுப்பு. சிறைவாசலில் தன் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த காந்தியை ஸ்மட்ஸ் நடு நெஞ்சில் ஏறி மிதித்து அறைக்குள் தள்ளிவிட்டான். சில நாட்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டதும் சிறையிலிருந்து வெளியே வந்த காந்தியடிகள் சிறையிலிருக்கும் போது தான் தைத்த ஒரு ஜோடி செருப்பை ஸ்மட்ஸ்க்கு பரிசாக கொடுத்தார். அதை வாங்கிப் போட்டுப் பார்த்த ஸ்மட்ஸ் தன் காலுக்குச் சரியாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யபட்டவனாய், ”என் கால் அளவு உங்களுக்கு எப்படி தெரிந்தது?” என்று காந்தியிடம் கேட்டான். அதற்கு காந்தியடிகள் “என்னை சிறைக்கு