Monday 22 July 2019

படமும், பாடமும்!

நீண்ட நாள் கழிச்சு ஒரு டிராயிங் காம்படீசன் சொல்லியிருக்காங்க டாடி. பெயர் கொடுத்திருக்கிறேன் என்றான் மகன். கொடுத்திருந்த தலைப்புகளைச் சொன்னான்

எந்த தலைப்பு செலக்ட் செஞ்சிருக்க

"யோசிக்கனும்".

இது போன்ற விசயங்களில் படைப்பாளியின் முடிவு தான் முக்கியம் என்பதால் யோசனை ஏதும் நான் சொல்வதில்லை.

இரண்டு நாட்களுக்கு முன் நெட்டில் இருந்து சில படங்களை தரவிறக்கம் செய்து காட்டினான். அதோடு, தண்ணீர் இருந்தால் பூமி எப்படி இருக்கும்? இல்லாவிட்டால் எப்படி இருக்கும்? என ஒரே படத்தில் காட்ட நினைக்கிறேன் என்றான். அவன் சொன்ன விசயங்களோடு நானும் சில விசயங்களைச் சொன்னேன்

Saturday 6 July 2019

கண்டங்களும், நாடுகளும்!

  

ஆர்க்டிக் - வடதுருவம்

ARCTIC CIRCLE

பூமியின் வடதுருவம் ஆர்க்டிக்என்றழைக்கப்படுகின்றது. பனிப்பாறைகள் மிகுந்து காணப்படும் இப்பிரதேசத்தில் நார்வே, சுவீடன், பின்லாந்து, இரஷ்யா, வடஅமெரிக்கா, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் உள்ளன.

ஆர்க்டிக் பெருங்கடல் இப்பகுதியில் உள்ளது. அதிகக் குளிர் காரணமாக குறைவான மக்களே வாழ்கின்றனர். இங்கே வாழும் மக்கள் எஸ்கிமோக்கள்என்றழைக்கப்படுகின்றனர். காலம் காலமாக வாழ்ந்து வரும் இன்யூட் இனத்தைத் தவிர முர்மான்ஸ்க், நோரில்ஸ்க், வோர்குட்டா ஆகிய இன மக்களும் வாழ்கின்றனர்.

 “இக்லூஸ்எனப்படும் பனிக்கட்டி வீடுகளில் வசிக்கும் மக்கள் வேட்டையாடுதல், மீன் பிடித்தல் மூலம் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.