Thursday 20 June 2019

மாத்தனும் - இல்லைன்னா - மாறனும்!

   மகளுடனான உரையாடலின் இடையே இந்த வருடத்துக்கு ஏதும் ப்ளான் இருக்கா? என்றேன்.

"ஸ்கூல் லீடர் (SCHOOL LEADER) அல்லது ஹவுஸ் லீடர் (SCHOOL HOUSE LEADER) இரண்டில் ஒன்றை பெற்று விட வேண்டும்" என்றாள்

அது என்ன அத்தனை சிரமமா? என்றேன்.

எங்க ஸ்கூல்ல ஸ்கூல் லீடர், ஸ்கூல் ஹவுஸ் லீடரா இதுவரைக்கும் பாய்ஸ (BOYS) மட்டும் தான் போடுறாங்க. அசிஸ்டெண்ட் லீடரா மட்டும் தான் கேர்ள்ஸ (GIRLS) போடுறாங்க. கேர்ள்ஸ்ஸ லீடரா செலெக்ட் செஞ்சா அச்சிவ் பண்ண முடியாதுன்னு நினைக்கிறாங்களா? என்றாள்.

இதை நீ ஸ்கூல்ல கேட்க வேண்டியது தானே என்றேன்.

வாய்ப்பே தராத போது நான் பொறுப்பேற்கவான்னு எப்படி நாங்களா கேட்க முடியும்? என்றாள்.

வாய்ப்பு தானா வராது. நாம தான் உருவாக்கனும் என்றேன்

அவளோ, “வாய்ப்பை உருவாக்கனுங்கிறது சரி தான். ஆனால் அதுக்கான ஸ்பேஸ் இருக்கனுமில்லையா? ஸ்கூல்ல அவங்களே முடிவெடுத்து அறிவிச்சுடுறாங்க. அப்புறம் எப்படி வாய்ப்பை உருவாக்க முடியும்?” என்றாள்.

அப்படின்னா, ”ஆணாதிக்கம்ஸ்கூல்லயே ஆரம்பிச்சிடுதுங்கிறியா? என்றேன்.

அது எனக்குத் தெரியல. ஆனால்லீடருக்கு பேர் கொடுங்கன்னு சொல்லி பேர் வாங்கிட்டு நீ லீடர் என பாய்ஸையும், நீ அசிஸ்டெண்ட் லீடர் என கேர்ள்ஸையும் அவங்களே தீர்மானம் செஞ்சுக்கிறதை வேற எப்படிச் சொல்றது டாடி? என்றாள்.

மாத்தனும் இல்லைன்னா மாறனும்என்று சொல்லி விட்டு அவள் வேலையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

நானும் அமைதியாய் இருந்தேன்.

 

No comments:

Post a Comment