ஆர்க்டிக் - வடதுருவம்
ARCTIC CIRCLE
பூமியின் வடதுருவம் “ஆர்க்டிக்” என்றழைக்கப்படுகின்றது. பனிப்பாறைகள் மிகுந்து காணப்படும் இப்பிரதேசத்தில் நார்வே, சுவீடன், பின்லாந்து, இரஷ்யா, வடஅமெரிக்கா, கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் உள்ளன.
ஆர்க்டிக் பெருங்கடல் இப்பகுதியில் உள்ளது. அதிகக் குளிர் காரணமாக குறைவான மக்களே வாழ்கின்றனர். இங்கே வாழும் மக்கள் “எஸ்கிமோக்கள்” என்றழைக்கப்படுகின்றனர். காலம் காலமாக வாழ்ந்து வரும் இன்யூட் இனத்தைத் தவிர முர்மான்ஸ்க், நோரில்ஸ்க், வோர்குட்டா ஆகிய இன மக்களும் வாழ்கின்றனர்.
“இக்லூஸ்” எனப்படும் பனிக்கட்டி வீடுகளில் வசிக்கும் மக்கள் வேட்டையாடுதல், மீன் பிடித்தல் மூலம் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
“ஸ்லெட்ஜ்” எனப்படும் நாய்கள் இழுத்துச் செல்லும் வண்டிகளும், “ஸ்கை-டூஸ்” என்றழைக்கப்படும் பனிக்கட்டிகளில் வேகமாக உருண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட வண்டிகளும் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
உருகும் பனிக்கட்டிகளால் வடமேற்குப் பாதை கப்பல் பயணத்திற்கு ஏற்றதாக மாறும் என்றும் பனிக்கட்டிகளின் அடி ஆழத்தில் உள்ள பெட்ரோலிய வளங்கள் பற்றி அறிய முடியும் என்றும் நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணமான அலாஸ்கா இப்பகுதியில் அமைந்துள்ளது
II அண்டார்டிகா - தென் துருவம்
ANTARTICA
- பரப்பளவில் ஐந்தாவது பெரிய கண்டம்.
- பூமியின் பரப்பளவில் 9.6 சதவிகிதம் உள்ள இதன் பரப்பளவு 14,00,000 ச.கி.மீ.
- தென்பசிபிக் கடலால் சூழப்பட்டுள்ள இக்கண்டத்தின் தெற்குப் பகுதியில் அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் உள்ளது.
- மக்கள் வசிக்காத, 90 சதவிகிதம் வரை பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ள இக்கண்டத்தில் பூமியின் நன்நீரில் 90 சதவிகிதம் உள்ளது.
- “வெள்ளைக் கண்டம்”, “பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம்” என்றழைக்கப்படும் இக்கண்டத்தை 4000-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.
- இக்கண்டத்தில் உள்ள பகுதிகளை பிரான்ஸ் (அடெலி லேண்ட்), ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலிய-அண்டார்டிகா பகுதி), இங்கிலாந்து (பிரிட்டிஷ் - அண்டார்டிகா பகுதி), நியூசிலாந்து (ரோடெபன்டன்சி), அர்ஜெண்டினா (அர்ஜெண்டைன் - அண்டார்டிகா பகுதி), சிலி (அண்டார்டிகா சிலியன் பிரோவின்ஸ்), நார்வே (டுரோனிங் மவுண்ட்லேண்ட் தீவுகள்) ஆகிய ஏழு நாடுகள் தங்களுக்குள் பிரித்துக் கொண்டு உரிமை கொண்டாடி வருகின்றன.
பூமியின் தென் துருவம் “அண்டார்டிகா” என்றழைக்கப்படுகிறது. இப்பனிப் பிரதேசம் 1819- ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இதன் 99 சதவிகித பரப்பு இரண்டு முதல் ஐந்து கிலோ மீட்டர் அளவுள்ள பனியால் உறைந்துள்ளது.
கடும் பனிப்பொழிவுடன் கூடிய சூறாவளி காற்று வீசிக் கொண்டே இருப்பதால் மனிதர்கள் இங்கு வசிக்கவில்லை. ஸீல், நீலதிமிங்கலம் முதலிய கடல்வாழ் உயிரினங்களும், பெங்குவின், பை மூக்குப் பறவை, பெட்ரோல் முதலிய கடல்வாழ் பறவைகளும், திருக்கை, விலாங்கு, காட் முதலிய மீன்களும் ஏராளமாக உள்ளன.
பூமிக்கடியில் நிறைய தாதுப்பொருட்கள் இருக்கலாம் என அறியப்பட்ட போதிலும் அவைகளை பனிப்பாறைகளை குடைந்தும், உடைத்தும் வெளியே கொண்டு வருவது சாத்தியமானதாக இல்லை. ஏராளமான பனிப்பாறைகள், பனி மலைகள் கொண்டு சீரற்று இருப்பதால் கடற்கரை சமநிலையில் இருப்பதில்லை. சுமார் 53 பனிச்சிகரங்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இச்சிகரங்கள் 12,000 அடி முதல் 16,864 அடி உயரம் கொண்டவைகளாகும்.
இன்றைய நிலையில் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக் களமாக விளங்கும் இப்பகுதிக்கு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே பல நாடுகளிலிருந்தும் ஆய்வாளர்கள் வர ஆரம்பித்தனர். ஆராய்ச்சி நோக்கமின்றி 1774-ம் ஆண்ட “கேப்டன் ஜேம்ஸ் குக்”கும், 1897-ம் ஆண்டு குளிர்காலத்தை உறைபனியில் கழிக்க விரும்பி “ரீகன் பாண்டிங்” என்பவரும் இங்கு வந்தனர்.
1901-1904-ம் ஆண்டுகளில் ஆய்வு பயணமாக வந்த “கேப்டன் இராபர்ட் எப்.ஸ்காட்” திரும்பி செல்லும் வழியில் தன் குழுவினருடன் குளிரில் உறைந்து இறந்து போனார். 1911-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி நார்வே நாட்டைச் சேர்ந்த “ரோல்ட் அமுன்சென்” தன் குழுவினருடன் இங்கு வந்து ஆய்வு செய்து முடித்து எந்தவித பாதிப்புமின்றி பத்திரமாக நாடு திரும்பினார். 1956-ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஷிண்ட் குழுவினர் இங்கு வந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.
1959-ம் ஆண்ட அண்டார்டிகா ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளும் இக்கண்டத்தை சூழ்ந்து கிடக்கும் பனிப்போர்வை உலக சீதோஷ்ண நிலையைப் பாதிக்கும் விதம், உயிரினங்களை இங்கு வீசும் பனிக்காற்று பாதிக்கும் விதம் ஆகியவைகளைப் பற்றி ஆராயவும், பொருளாதார வளர்ச்சிக்கும், மனித வாழ்வுக்கும் இப்பகுதியை மாற்றியமைப்பதற்கான சூழ்நிலை குறித்து ஆராயவும் நிரந்தர ஆராய்ச்சிக் கூடங்களை அமைக்கத் தொடங்கின. இந்தியாவும் “தக்ஷிண கங்கோத்திரி” என்னுமிடத்தல் தன் ஆய்வுக்கூடத்தை அமைத்துள்ளது.
3794 மீட்டர் உயரமுள்ள “எரீபஸ்” என்னும் எரிமலை இக்கண்டத்தின் குறியீடாக விளங்குகிறது. இது தவிர நிறைய எரிமலைகள் இப்பகுதி முழுவதும் நிறைந்துள்ளது.
உலகின் நீளமான 400 மீட்டர் அளவுள்ள லாம்பெர்ட் பனிப்பாறை இக்கண்டத்தில் அமைந்துள்ளது.
நன்றி – தினமணி - சிறுவர்மணி
கண்டங்களை பற்றி அறியாத பல விசயங்களை அறிய தந்துள்ளீர்கள் நன்றி!
ReplyDeletehttps://www.scientificjudgment.com/
அருமை !!!
ReplyDelete