Saturday 9 December 2023

கொஸ்டின் பேப்பர் இண்டீரியரா எடுத்திருப்பாங்கன்னு நினைச்சேன்-

ஸ்கூல்ல ஒரு சம்பவம் நடந்து போச்சு டாடி.

என்னாச்சு? எதிலும் சிக்கிட்டியா?

அதுலாம் இல்ல. இது வேற மாதிரி என்றான்.

வேற மாதிரின்னா?

இன்னைக்கு தமிழ் எக்ஸாம். பதினொன்றாம் வகுப்பு பசங்களோட பன்னிரெண்டாம் வகுப்பு பசங்களும் கலந்து எக்ஸாம் ஹால்ல இருந்தோம். கொஸ்டின் பேப்பர் கொடுத்ததும் எல்லாரும் எழுத ஆரம்பிச்சுட்டோம்.  என் வகுப்பு பையன் ஒருத்தன் அவனுக்கு பக்கத்துல இருந்த 12 ம் வகுப்பு அண்ணன்கிட்ட ஒரு கேள்விக்கு ஆன்சர் கேட்டிருக்கிறான். அந்த அண்ணன் இவனை பார்த்துட்டு ஒன்னும் சொல்லாம இருந்துட்டாங்களாம்.  கொஞ்ச நேரம் கழித்து அதே அண்ணனிடம் கொஸ்டினில் இருந்த ஒரு மனனப் பாடலை சொல்லச் சொல்லி கேட்டிருக்கிறான்.  அப்பொழுது நேரம் 12.20 க்கு மேலாகிடுச்சு. கேள்வி கேட்டிருந்தாங்க சரி…..இதே மனனப் பாடலை எப்படி இவனுக்கும் கேட்டிருக்க முடியும்னு? நினைச்சு அந்த அண்ணன் அவன் கொஸ்டின் பேப்பரை வாங்கிப் பார்த்திருக்காங்க. அது 12 ம் வகுப்பு கொஸ்டின் பேப்பராம்.

கேட்டதும் நான், மனைவி, அலைபேசியில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த மகள் மூவரும் அடக்க முடியாது சிரித்துக் கொண்டிருக்க, இது மட்டுமல்ல, இதுல இன்னொரு ஜோக்கும் நடந்துருச்சு என்றான்.

இன்னுமா? என்றேன்.

ஆமாம். அந்த கொஸ்டின் பேப்பருக்கு அடிசனல் பேப்பர்லாம் வாங்கி எழுதி இருந்தான்.

சாருக ஒன்னும் கேக்கலையா?

சார் கேட்டதுக்கு, “கொஸ்டின் பேப்பர் இண்டீரியரா எடுத்திருப்பாங்கன்னு நினைச்சேன்”னு சொன்னான்.

அதுக்கு சார் என்ன சொன்னார்?

நூறு மார்க்குமா இண்டீரியரா கேட்பானுகன்னு சொல்லி கோ ஆர்டினேட்டர் சார்கிட்ட கூட்டிட்டு போனாரு என்றான்.

கேட்ட கேள்விக்கு சரியான பதில் தெரியாமல் கதை அடிச்சு விடுறது நம்ம தலைமுறை. வேற கிளாஸ் கொஸ்டின் பேப்பரா இருந்தாக் கூட கவலைபடாமல் கேட்ட கேள்விகளுக்கு அடிசனல் சீட் வரை வாங்கி பதில் எழுதுவது இப்போதைய தலைமுறை என மனைவியிடம் சொன்னேன்.

No comments:

Post a Comment